தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி ரசம்

Go down

தக்காளி ரசம் Empty தக்காளி ரசம்

Post  ishwarya Sat Apr 13, 2013 11:49 am


தேவையான பொருள்கள்:

தக்காளி = 150 கிராம்
பச்சை மிளகாய் = 2
சீரகம் = அரை ஸ்பூன்
மிளகு = அரை ஸ்பூன்
தேங்காய் பால் = அரை கப்
பூண்டு = 5 பல்
இஞ்சி = சிறு துண்டு
தேங்காய் எண்ணெய் அல்லது நெய் = 1 ஸ்பூன்
சோம்பு = 1
மிளகாய் வற்றல் = 1
பட்டை = 1
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து 4 கப் நீரில் கலந்து கொள்ளவும். இதனோடு பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும்.
சீரகம், மிளகு உடைத்து சேர்க்கவும். இஞ்சியையும், பூண்டையும் தோலோடு தட்டி சேர்க்கவும்.
தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் கரகரப்பாக பொடித்த பட்டை, சோம்பு ஆகியவற்றையும் கறிவேப்பிலை 1 மிளகாய் வற்றலையும் தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை சேர்க்கவும். தேங்காய் பால் சேர்க்கவும்.

சுவையான தக்காளி ரசம் தயார். இதை ரைஸோடும் கலந்து சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum