கோவைக்காய் குழம்பு
Page 1 of 1
கோவைக்காய் குழம்பு
கோவைக்காய்
கோவைக்காய்
பனீர் துண்டுகள்
பனீர் துண்டுகள்
வெங்காயம்
வெங்காயம்
தேவையானவை:
நறுக்கிய கோவைக்காய் – முக்கால் கப்
பனீர் துண்டுகள் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2 (தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி
பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
சீரகம்–ஒரு டீஸ்பூன்
சோம்பு –ஒரு டீஸ்பூன்
புளி– சிறிதளவு
எண்ணெய்– தேவையான அளவு
உப்பு– தேவையான அளவு
பொடிக்க:
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு– 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மஞ்சள்தூள் –அரை டீஸ்பூன்
ஆகியவைகளை தனித்தனியே வறுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பனீரை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, சீரகம் போட்டு தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் இஞ்சி-பூண்டு விழுதுகளைச் சேர்த்து நறுக்கிய கோவைக்காயைப் போட்டு நன்றாக வதக்கி உப்பு, மஞ்சள்தூள், வறுத்து பொடித்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இதில் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வறுத்த பனீரை போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
சுவையான கோவைக்காய் குழம்புத் தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
மருத்துவ குணங்கள்:
கோவைக்காய் கரோட்டின், புரதம் மற்றும் ஃபைபர் அகியவற்றை பெற்றுள்ளது. இதனால் இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் திறன் கொண்டது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum