தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

5 ஆண்டுகளுக்கு திருமணம் இல்லை! – சோனியா அகர்வால்

Go down

5 ஆண்டுகளுக்கு திருமணம் இல்லை! – சோனியா அகர்வால் Empty 5 ஆண்டுகளுக்கு திருமணம் இல்லை! – சோனியா அகர்வால்

Post  ishwarya Mon Apr 08, 2013 1:23 pm

இன்னும் 5 ஆண்டுகளுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று
செல்வராகவனின் மாஜி மனைவியும், நடிகையுமான சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் படத்தின் மூலம்
தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அவர்
செல்வராகவனையே காதலித்து திருமணம் செய்தார். சிலகாலம் மகிழ்ச்சியாக
குடும்பம் நடத்திய சோனியாவும், செல்வாவும் பின்னர் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்குப் பிறகு முதல் முறையாக ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில்
ஹீரோயினாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாக
எந்த அளவு கஷ்டப்படுகிறாள், எதையெல்லாம் இழக்கிறாள் என்பதை பச்சையாக
சொல்லும் படம் இது.
ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் குறித்து சோனியா அகர்வால் அளித்துள்ள
பேட்டியில், “நடிகையாக அறிமுகமாக கற்பை இழக்க தயாராக இருக்க வேண்டும்
என்பது போல இந்தப் படத்தி்ல வைக்கப்பட்டுள்ள காட்சிகள் கற்பனையானவையே. நான்
நடிகையாக இதுபோல எதுவும் செய்யவில்லை. நான் மிகவும் டீசன்டாக சினிமாவுக்கு
வந்தேன். என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
விவாகரத்து பெற்ற ஒரு நடிகை மீண்டும் கதாநாயகியாக நடிப்பது பெரிய
விஷயம்தான். நான் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி. மீண்டும் திருமணம் என்பதைப்
பற்றி நினைக்க விரும்பவில்லை. குறைந்தது 5 வருடங்களுக்கு திருமணம் பற்றிய
பேச்சுக்கே இடமில்லை, என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum