மன உளைச்சலால் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகுகிறேன் – நடிகை சோனா
Page 1 of 1

நடிகை சோனாவின் பாலியல் புகார் விவகாரம் சமரசத்தில் முடிந்துள்ளது. மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக போலீசுக்கு போனார். கோர்ட்டுக்கும் இவ்வழக்கு போனது. சரண் போலீசார் கைது செய்யாமல் இருக்க எஸ்.பி.பி. சரண் முன் ஜாமீன் பெற்றார். பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரத்தை சோனா போலீசில் அளித்ததால் வழக்கு சூடு பிடித்தது.
மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி போன்றோரிடம் போலீசார் விசாரணையை துவங்கினர். இன்னொரு புறம் சோனா, சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன. சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார். இதையடுத்து வழக்கை சோனா வாபஸ் பெற்றார். ஆனாலும் நடந்த சம்பவங்கள் அவர் மனதை மிகவும் பாதித்துள்ளது. இதனால் சில நாட்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக தெரிவித்தார்.
இது குறித்து சோனா மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:- ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கு வந்தது போல் எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. தனி ஆளா நின்னு போராடினேன். பிறகு பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார். இதனால் வழக்கை வாபஸ் பெறுகிறேன். வக்கீலை வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஓரிரு நாளில் அது முடிந்து விடும்.
அதன் பிறகு வெளிநாடு போகப் போகிறேன். மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காகத்தான் வெளிநாடு செல்கிறேன். ஒரு வருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறேன். வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயாரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந்தேன். அந்த படத்தை இனி தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.
வெங்கட் பிரபுவும் நானும் சுமூகமாக பேசி விலகிவிட்டோம். கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்து இருந்தது. சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன். இவ்வாறு சோனா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை சோனா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகல்!
» சினிமாவை விட்டு விலகலா? -ராதிகா ஆப்தே
» மௌனம் பேசியதே படத்தோடு சினிமாவை விட்டு விலக இருந்தேன்: த்ரிஷா
» முதல் படம் தோற்றதால் “சினிமாவை விட்டு விலக நினைத்தேன்” – திரிஷா
» தெலுங்கு கனிமொழிக்கு தடைக்கோரி நடிகை சோனா மனு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum