தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீகாந்த்துக்கு ரொம்ப பிடிச்ச ‘சதுரங்கம்’!

Go down

ஸ்ரீகாந்த்துக்கு ரொம்ப பிடிச்ச ‘சதுரங்கம்’! Empty ஸ்ரீகாந்த்துக்கு ரொம்ப பிடிச்ச ‘சதுரங்கம்’!

Post  ishwarya Fri Apr 12, 2013 1:56 pm

சசி இயக்கத்தில் ‘ரோஜாக் கூட்டம்’ படத்தின் மூலம் சாக்லேட் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீகாந்த் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசியின் ‘பூ’ படம்தான் அவருக்கு பிரேக்காக அமைந்தது. தற்போது உண்மையாகவே ஸ்ரீகாந்தின் நிஜ இன்னிங்ஸ் தொடங்குகிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘த்ரி இடியட்ஸ்’ தமிழ் ரீமேக்கான ‘நண்பனில்’ நடித்து முடித்திருக்கும் ஸ்ரீகாந்துக்கு, சசியைப் போலவே ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் மீண்டும் பிரேக் கொடுத்தவர் இயக்குநர் கரு.பழனியப்பன்.

இவரது இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடிப்பில் ‘சதுரங்கம்’ என்ற படம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் படமாக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் நிஜ இதழியல் சினிமா என்று வர்ணிக்கப்பட்டு வந்த இந்த படம், பல காரணங்களால் வெளியாகவில்லை. ஆனால் தற்போது ஜனரஞ்சக இதழியல் படமாக ‘கோ’ வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்தது. ‘கோ’ தந்த உற்சாகத்தில் தற்போது, ‘சதுரங்கம்’ படத்தை பெரும் முயற்சி எடுத்து வெளியிட உள்ளனர். “படத்தில் ஸ்ரீகாந்த், திசைகள் என்ற பத்திரிகையில் கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறார்.

சில சூழ்நிலைகளால், சிறைக்கு சென்று வெளியே வந்து என்ன செய்கிறார் என்பதை தோலுரித்துக் காட்டப் போகிறதாம். ‘சதுரங்கம்’ படம் குறித்து ஸ்ரீகாந்திடம் கேட்டபோது, படம் ஐந்து வருடம் கழித்து வெளியாவதில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இப்போது ரிலீசாவதை நினைக்கும் போகும் சந்தோஷமாக இருக்கிறது. நான் நடித்த படங்களிலேயே, என் மனசுக்கு ரொம்ப பிடித்த படமென்றால் அது ‘சதுரங்கம்’தான். சரியான நேரத்தில் படம் ரிலீஸ் ஆகியிருந்தால், எனக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்திருக்கும். எனது சினிமா கேரியரே வேறுமாதிரி ஆகியிருக்கும். இது ‘கோ’ போலவே ஒவ்வொரு பத்திரிகையாளரும் பார்க்க வேண்டிய படம், என்று உற்சாகமாகப் பேசுகிறார்.

கேரியர் வேறுமாதிரி இருந்திருக்குமா.. பாத்து சாரே… மொத்தமா சுருண்டுக்காம…….

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum