25-ந்தேதி ஆடிக்கிருத்திகை; வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள்
Page 1 of 1

வடபழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும், காவடிகள் மற்றும் காணிக்கைகள் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆலய ராஜகோபுரத்தின் முன்புறம் 3 வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு வரிசைகளில் கட்டணமின்றியும், ஒரு வரிசையில் ரூ.20 நுழைவுச்சீட்டு பெற்றும் தரிசனம் செய்யலாம். வரிசையில் செல்லும் போதே தேவையான அர்ச்சனை சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு விரைவு தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டு கோவிலின் மேற்கு கோபுர வாசலில் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு ரூ.50 சிறப்பு நுழைவுச்சீட்டு பெற்று விரைவு தரிசனம் செய்யலாம். காவடி செலுத்துவோர் மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்கள் வந்து உற்சவர் அர்ச்சனை செய்யுமிடத்தில் காவடி சீட்டுகளை பெற்று காவடிகளை செலுத்தலாம். முடிக்காணிக்கை செலுத்துவோர் மேற்கு கோபுரம் எதிரில் முடிக்காணிக்கை செலுத்துமிடத்தில் அதற்கான சீட்டுகளை பெற்றுக் கொண்டு செலுத்தலாம்.
பக்தர்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கு கழிவறை மற்றும் குளியலறை உள்ளன. இலவச காலணி பாதுகாப்பு வசதியும் வாகன நிறுத்த வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25-ந்தேதி அதிகாலை பூஜைகள் முடிந்தவுடன் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை தங்ககவச அலங்காரம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை ராஜஉடை அலங்காரம் தரிசனமும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சந்தனகாப்பு புஷ்ப அலங்கார தரிசனமும் நடைபெறும். சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்தால் குடிநீர் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சுகாதார துறையினரால் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, காவல்துறையினர் மூலம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையினர் மூலம் வாகனங்கள் ஒழுங்குபடுத்தி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதியிலிருந்தும் கோவிலுக்கு வந்து செல்ல சிறப்பு பஸ் வசதியும் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» 25-ந்தேதி ஆடிக்கிருத்திகை; வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள்
» திருப்பதி கோவிலில் நாளை யுகாதி ஆஸ்தான பூஜை: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 14-ந்தேதி கொடி ஏற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum