திருப்பதி கோவிலில் நாளை யுகாதி ஆஸ்தான பூஜை: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
Page 1 of 1

தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. புதிய ஆண்டான ஸ்ரீ விஜயநாம ஆண்டை வரவேற்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
யுகாதியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. கோவில் முழுவதும் காலை 6 மணி முதல் 11 மணிவரை வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டது.
அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நாளை கோவிலில் யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. ஏழுமலையான் கோவிலில் நடக்கும் உற்சவங்கள் அனைத்தும் யுகாதி தினத்தில் இருந்தே தொடங்கப்படுவது வழக்கம் அதன்படி கடந்த ஆண்டு கணக்குகள் முடிக்கப்பட்டு நாளை புது கணக்கு தொடங்கப்படும்.
அதிகாலை ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை, அபிஷேகம், தோமாலை சேவை நடக்கிறது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் மலையப்ப சாமிக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரும் பட்டு வஸ்திரமே நாளைய தினம் மூலவருக்கும் உற்சவருக்கும் அணிவிக்கப்படும்.
பின்னர் ஆஸ்தான பண்டிதர்கள் ஏழுமலையானுக்கு புத்தாண்டு பஞ்சாங்கம் படிப்பார்கள். புதிய ஆண்டின் பலன்கள் கூறப்படும். இதுவே யுகாதி ஆஸ்தானம் ஆகும். புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு தேவையான லட்டு பிரசாதம் தயாராகி வருகிறது. மேலும் கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களை வரவேற்கும் வகையில் மலை பாதையிலும் அலங்காரம் செய்யப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: டி-ஷர்ட், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், குட்டைப்பாவாடை அணிய தடை
» 25-ந்தேதி ஆடிக்கிருத்திகை; வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள்

» ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு உணவு, கோவிலில் சிறப்பு பூஜை
» திருப்பதி கோவிலில் நயன்தாரா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum