திடுக்கிட வைத்த மோனிகா படம் – தியேட்டருக்கு வந்த போலீஸ்
Page 1 of 1
திடுக்கிட வைத்த மோனிகா படம் – தியேட்டருக்கு வந்த போலீஸ்
’பிளாகர்ஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும் வலைப்பூ எழுத்தாளர்கள் ஒரு படத்தின் ஓப்பனிங்கை தீர்மானிக்கக் கூடிய சக்தி படைத்தவர்களாக மாறி வருகிறார்கள். இந்த மாற்றம் இன்னும் திரைத்துறையில் அநேகம் பேரை சென்று சேரவில்லை என்றாலும், ஒரு சில இயக்குனர்கள் இவர்களின் வலிமையை நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அதன் காரணமாக பத்திரிகையாளர்களை அழைத்து பிரத்யேகமாக படம் போட்டு காண்பிப்பதை போல, வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் தனி ஷோ போடப்படுகிறது.
அப்படி சில தினங்களுக்கு முன்பு போடப்பட்ட படம் வர்ணம். மோனிகா நடித்திருக்கும் இப்படம் இயல்பும் யதார்த்தமும் நிறைந்த படம். அதுமட்டுமல்ல, அவருக்கு மிக முக்கியமான படமாகவும் இருக்கும். ஜாதி மோதல்களை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் ஒரு அழகான காதலும் இருக்கிறது. எல்லாவற்றையும் விட சிலந்தி படத்திற்கு பின் மோனிகா கொஞ்சம் ’அப்படி இப்படி’ நடித்திருக்கிறார் வர்ணத்தில். (நீல கலர் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தி)
சரி விஷயத்துக்கு வருவோம். இந்த ஷோவை ஏவிஎம் ஸ்டுடியோவுக்குள் அமைந்திருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் திரையிட்டிருந்தார்கள். படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று உள்ளே நுழைந்தது போலீஸ். கையோடு வந்திருந்த மோப்ப நாய்கள் தியேட்டரின் ஒரு சீட் விடாமல் துளைத்தெடுத்தன.
ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த பிளாக்கர்களிடம், ஒண்ணுமில்ல… வெடிகுண்டு புரளி, அதான் என்றபடி நகர்ந்தது போலீஸ். படமே வன்முறையும் ஜாதிக்கலவரமும் நிறைந்தது. அதனால் கூட போலீஸ் வந்ததோ என்னவோ?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராவணன் வெளியாகவிருந்த தியேட்டருக்கு தீ வைத்த சிங்களர்கள்!
» கடிக்க வந்த பாம்பு, கையைப் பிடித்து இழுத்த இயக்குநர்… மோனிகா பரபர தகவல்!
» ராஜமௌலி படம் - திருமணத்தை தள்ளி வைத்த ஹீரோ
» கிளைமாக்ஸுக்கு வந்த இரண்டாவது படம்
» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» கடிக்க வந்த பாம்பு, கையைப் பிடித்து இழுத்த இயக்குநர்… மோனிகா பரபர தகவல்!
» ராஜமௌலி படம் - திருமணத்தை தள்ளி வைத்த ஹீரோ
» கிளைமாக்ஸுக்கு வந்த இரண்டாவது படம்
» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum