தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராவணன் வெளியாகவிருந்த தியேட்டருக்கு தீ வைத்த சிங்களர்கள்!

Go down

ராவணன் வெளியாகவிருந்த தியேட்டருக்கு தீ வைத்த சிங்களர்கள்! Empty ராவணன் வெளியாகவிருந்த தியேட்டருக்கு தீ வைத்த சிங்களர்கள்!

Post  ishwarya Thu Apr 25, 2013 2:16 pm

ராவணன் திரைப்படம் ரீலீஸாகவிருந்த மட்டக்களப்பு சாந்தி திரையரங்குக்கு சிங்களர்கள் தீ வைத்தனர்.

ஐஃபா விழாவைப் புறக்கணித்த நடிகர்கள் நடித்த படத்தை ஓடவிடக் கூடாது என சிங்களர்கள் குழு ஒன்று கோஷமிட்டபடி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராயை சிறப்பு விருந்தினராக ஐஃபா விழாவுக்கு அழைத்தி்ருந்தனர். ஆனால் தமிழர் போராட்டம் காரணமாக அவரும் அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் ஆகியோர் புறக்கணித்தனர்.

ராவணன் படம் இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக திரையிடப்படவிருந்தது. ஆனால் விழாவுக்குப் போனால் தமிழகத்தில் ராவணனை வெளியாக விடமாட்டோம் என தமிழ் உணர்வாளர்கள் எச்சரித்ததால் மணி ரத்னமும் போகவில்லை. ராவணனும் திரையிடப்படவில்லை. இதனால் விழா பெரும் தோல்வியைத் தழுவியது.

அந்த ஆத்திரத்தை இப்போது காட்டுகிறார்கள் சிங்களர்கள்.

ஐஃபா விழாவில் பங்கேற்காத நடிகர்களின் படங்களை இனி இலங்கையில் திரையிடக் கூடாது அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மட்டக்களப்பு நகரில் ராவணன் திரைப்படம் வெளியாகவிருந்த சாந்தி திரையரங்கின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தினர்.

இதுகுறித்து தியேட்டர் மேலாளர் கந்தசாமி கூறுகையில், சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தை திரையிடக்கூடாது என்று எச்சரித்தனர். நான் அப்போதே காட்டான்குடி போலீஸில் புகார் கூறினேன். ஆனால் இப்போது கொளுத்திவிட்டார்கள்” என்றார்.

ஆனால் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ராவணன் படம் வெளியாகியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திடுக்கிட வைத்த மோனிகா படம் – தியேட்டருக்கு வந்த போலீஸ்
» அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்
» கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து!
» வாணியம்பாடியில் விஸ்வரூபம் ஓடிய தியேட்டருக்கு சீல்: ரசிகர்கள் ஏமாற்றம்
» சினிமா தியேட்டருக்கு வர மறுக்கும் வசதி படைத்தவர்களை ஈர்க்கும் யுக்தியே டி.டி.எச்.- கமல்ஹாசன் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum