கொட்டும் மழையில் ஓட்டு போட்ட நடிகர்-நடிகைகள்…!
Page 1 of 1

சென்னையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது. கொட்டும் மழையிலும் நடிகர்-நடிகையர் சிலர் ஓட்டு போட்டனர். சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஓட்டுப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலின்போது, பெரும்பாலான நடிகர்-நடிகைகள் சூட்டிங்கிற்காக வெளியூர் சென்று விட்டார்கள். ஊரில் இருந்த சில நடிகர்-நடிகைகள் மட்டும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டார்கள்.
நடிகர் விஜய், சென்னை அடையார் காமராஜர் அவென்யுவில் உள்ள மாநகராட்சி பள்ளியில், ஓட்டுப் போட்டார். அதேபோல் லட்சிய தி.மு.க. தலைவரும் நடிகர்-டைரக்டருமான டி.ராஜேந்தர், நடிகர் பிரசன்னா, நடிகை குஷ்பு அவரது கணவர் சுந்தர்.சி, நடிகை சினேகா, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் அவரது மனைவி சுஜாதா உள்ளிட்ட பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்தந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டுபோட்டனர். சில இடங்களில் மழை பெய்தது. இருந்தும் கொட்டு மழையில் நடிகர், நடிகையர் ஓட்டு போட்டனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் நேற்று காலை ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன் சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு சென்றிருந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயரோ, குடும்பத்தினர் பெயரோ இல்லை. இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி நடிகர் செந்தில் கூறுகையில், “நான் முதல்வர் அம்மாவின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க.வுக்காக தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறேன். இப்போதும் தாம்பரத்தில் பிரசாரத்துக்காக செல்கிறேன். பிரசாரத்துக்கு முன்பு ஓட்டு போட்டுவிட்டுச் செல்ல வந்தேன். ஆனால் எனது பெயர் இல்லை. இது எனக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது எனது பெயரை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். இதனால் எனது குடும்பத்தின் 5 ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போய் விட்டது,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொட்டும் மழையில் ‘சிக்ஸ் பேக்’ காட்டி ஆடிப் பாடி அதிர வைத்த ஜெனீபர் லோபஸ்!
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» நடிகர், நடிகைகள் அவசரமா கூடுறாங்களா?!
» கோகைன் போதைவஸ்த்து: அடிமையான நடிகர், நடிகைகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum