தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர், நடிகைகள் அவசரமா கூடுறாங்களா?!

Go down

நடிகர், நடிகைகள் அவசரமா கூடுறாங்களா?!  Empty நடிகர், நடிகைகள் அவசரமா கூடுறாங்களா?!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:06 pm

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் இடையே ஊதியம் நிர்ணயிப்பதில் மோதல் நீடித்து வருகிறது. புதிய சம்பள உயர்வு விகிதத்தை பெப்சி தொழிலாளர்கள் நிர்ணயித்து உள்ளனர். அதை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கவும் முயற்சித்து வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே அரசின் தொழிலாளர் நல ஆணையம் சமரச முயற்சி மேற்கொண்டது. புதிய சம்பள நிர்ணயம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இதையடுத்து பெப்சி தொழிலாளர்கள் கடந்த 7-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லைட்மேன்கள், ஸ்டண்ட் நடிகர்கள், துணை நடிகர், நடிகைகள், கலை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், மேக்கப் மேன்கள், டிரைவர்கள் என அனைத்து தொழிலாளர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் 35-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலும், ஓட்டலிலும் முடங்கி கிடக்கின்றனர். தயாரிப்பாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் இடையே சமரசம் ஏற்படுத்த இயக்குநர்கள் சங்கம் முயற்சித்து வருகிறது. நடிகர், நடிகைகளும் சமரச முயற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக நடிகர்- நடிகைகளின் அவசர கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் நட்சத்திர ஓட்டலில் நாளை (11-ந்தேதி) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், அஜித், விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் திரையுலக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பரவாயில்ல... இப்பவாச்சும் முழிச்சீங்களே.......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» கோகைன் போதைவஸ்த்து: அடிமையான நடிகர், நடிகைகள்!
» விலங்குகள் மீது பிரியம் காட்டும் நடிகர், நடிகைகள்
» தமிழர்களை சந்திக்க நடிகர், நடிகைகள் இலங்கை பயணம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum