இன்னும் திருமணம் செய்யாதது ஏன்…? சித்தாரா விளக்கம்!
Page 1 of 1

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்இந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்தவர் நடிகை சி்த்தாரா. தமிழில் “புது புது ராகங்கள்”, “புது வசந்தம்”, “உன்னை சொல்லி குற்றமில்லை”, “புதுப்புது அர்த்தங்கள்” உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், “நட்புக்காக”, “படையப்பா” உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்றால் என்ன செய்வது. என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது. ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது. சினிமாவை தேடி நான் வரவில்லை. சினிமா தான் என்னை தேடி வந்தது. சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன். அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். 25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். காதலித்து இருக்கிறேன். அது, கல்யாணம் வரை போகவில்லை. காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும். அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
» பிரபு – சித்தாரா நடிக்கும் கோட்டை!
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum