தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அங்காடித்தெரு புகழ் மகேஷ் நடிக்கும் வெயிலோடு விளையாடு!

Go down

அங்காடித்தெரு புகழ் மகேஷ் நடிக்கும் வெயிலோடு விளையாடு! Empty அங்காடித்தெரு புகழ் மகேஷ் நடிக்கும் வெயிலோடு விளையாடு!

Post  ishwarya Wed Apr 10, 2013 1:22 pm

“அங்காடித்தெரு” படம் மூலம் பிரபலமான நடிகர் மகேஷ், அடுத்து புதுமுக இயக்குநர் ராம்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு “வெயிலோடு விளையாடு” என பெயரிட்டுள்ளனர். விளையாட்டு வீரனின் உணர்வுகளை பற்றி உணர்வுபூர்வமாக கதையாக்கி இருக்கிறார் டைரக்டர்.

விளையாட வசதியில்லாத ஒருவன், எப்படி போராடி விளையாட்டில் வெற்றி பெறுகிறான் என்பதையும், அதற்காக அவர் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவனின் மாமா மகள் அவனுக்கு எப்படி உதவுகிறாள் என்பதையும் அழகாக படமாக்கி வருகிறாராம் இயக்குநர். படத்தில் வாலிபால் விளையாட்டு வீரராக மகேஷூம், அவருக்கு ஜோடியாக, அவரது மாமா மகளாக குங்குமப்பூவும் கொஞ்சிபுறாவும் பட நாயகி தனன்யாவும் நடிக்கின்றனர்.

கார்த்திக்ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் அவரது தம்பியும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். கூடவே இந்தபடத்தில், இசைஞானி இளையராஜா ஒரு பாடலையும் எழுதியது, டைரக்டருக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்துள்ளதாம். படத்தின் பெரும்பகுதி சூட்டிங் காரைக்குடி பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இம்மாதம் ஆடியோ ரிலீஸ் நடக்கிறது, விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum