தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் யாசகன்

Go down

அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் யாசகன் Empty அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் யாசகன்

Post  ishwarya Wed Mar 27, 2013 5:40 pm

அகரம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக கே.கே.சந்தோஷ்பாண்டியன் தயாரிக்கும் படம் ‘யாசகன்’. இப்படத்தை அமீர் மற்றும் சசிகுமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய துரைவாணன் இயக்குகிறார்.

இந்த படத்தில் ‘அங்காடித் தெரு’ மகேஷ் நாயகனாக நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த நிரஞ்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர், நடிகையர் நடிக்கின்றனர்.

இது முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி, மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இணைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு முன்பு ‘சித்தன்’ என பெயிரிட்டிருந்தனர். தற்போது ‘யாசகன்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் துரைவாணன் கூறும்போது, இந்த வருடத்தின் மிகச்சிறந்த காதல் படமாக இது இருக்கும். குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று கூறினார்.

இப்படத்திற்கு ‘கனிமொழி’, ‘லீலை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சதீஷ் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். கே.வி.ஆனந்தின் உதவியாளர் பாபு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் மார்ச் மாதம் மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum