தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது

Go down

காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது Empty காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது

Post  ishwarya Wed Apr 10, 2013 12:38 pm

ஷங்கர் டைரக்டு செய்த `பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், ஜெனிலியா. `சச்சின்’, `சந்தோஷ் சுப்பிரமணியம்’, `வேலாயுதம்’ உள்பட சில தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவர், `துஜே மேரி கசம்’ என்ற இந்தி படத்தில், ரித்தேஷ் தேஷ்முக் ஜோடியாக நடித்தார். ரித்தேஷ் தேஷ்முக், முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். இந்தி படங்களில், கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவரும், ஜெனிலியாவும் ஜோடியாக நடித்தபோது, இரண்டு பேருக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. ஆனால், இரண்டு பேரும் தங்கள் காதலை மறுத்து வந்தார்கள். எல்லா நட்சத்திர காதல் ஜோடிகளையும் போல், “நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்” என்று கூறி வந்தார்கள்.

ஜெனிலியா-ரித்தேஷ் தேஷ்முக் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி, ஜெனிலியா-ரித்தேஷ் தேஷ்முக் திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 4-ந் தேதி, மும்பை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடக்கிறது. திருமணத்துக்கு உறவினர்களையும், முக்கிய நண்பர்களையும் மட்டும் அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் `தேரே நாள் லவ் ஹோ கயா’ என்ற இந்தி படத்தில் ஜோடியாக நடித்து வந்தார்கள். இந்த படமும் திருமணம் நடைபெறும் அதே பிப்ரவரி முதல் வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» களைகட்டிய ஜெனிலியா-ரித்தேஷ் திருமண விழா… இன்று நிச்சயதார்த்தம் – நாளை திருமணம்!
» ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது
» பிப்ரவரி 2 ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது விஸ்வரூபம்
» விக்ரம்-ஜீவா நடிக்கும் டேவிட் பிப்ரவரி 1ம் தேதி வெளியீடு!
» சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு – ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum