700 பிரிண்ட்டுகளுடன் பிரசாந்தின் மம்பட்டியான்!
Page 1 of 1

“பொன்னர் சங்கர்” படத்திற்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் “மம்பட்டியான்” படத்திற்கு மட்டும் 700 பிரிண்ட்டுகள் போட்டுள்ளனர். இது பிரசாந்தின் முந்தைய படங்களை விட அதிகமாகும். பொதுவாக பிரசாந்த் படங்கள் என்றாலே, கண்டிப்பாக ஏதேனும் ஒரு புதிய விஷயம் இருக்கும். அவரின் ஒவ்வொரு படத்திலும் இதை காணலாம். காவேரி, சர்மிளா, மதுபாலா, திவ்யபாரதி, ரம்பா, ரியா சென், ரிங்கி கண்ணா இப்படி ஏகப்பட்ட ஹீரோயின்களை அறிமுகப்படுத்திய பெருமை பிரசாந்துக்கு உண்டு. அதுமட்டுமல்ல நடிகை சிம்ரனுடன் மட்டும் 6படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்த் இடையில் பல்வேறு பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் “பொன்னர் சங்கர்” படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆன பிரசாந்த், இப்போது அவரது அப்பா தியாகராஜன் நடிப்பில் 1983ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட்டான “மலையூர் மம்பட்டியான்” படத்தின் ரீ-மேக்கான “மம்பட்டியான்” படத்தில் நடித்து வருகிறார். தியாகராஜனே இயக்கும் இப்படத்தில் பிரசாந்துடன், மீரா ஜாஸ்மின், மும்மைத்கான், பிரகாஷ்ராஜ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். அப்போது இளையராஜா இசையமைத்த அந்தபடத்திற்கு இப்போது சற்று மெருகேற்றி தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகியிருக்கும் இப்படம் டிசம்பர் 13ம் தேதி ரிலீசாகிறது, இம்மாதம் 23ம் தேதி ஆடியோ ரிலீஸ் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் படம்பற்றி தியாகராஜா கூறும்போது, மம்பட்டியான் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். ஆக்ஷ்ன், த்ரிலிங், காமெடி, செண்டிமென்ட், இயற்கை கொஞ்சும் அழகு என மம்பட்டியான் படம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். மம்பட்டியான் படத்தை லக்ஷ்மி சாந்தி பிலிம்ஸ் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பகுதிகளில் வெளியிட இருக்கிறது. படத்திற்காக மொத்தம் 700 பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளது. இது பிரசாந்தின் முந்தைய படங்களை விட கூடுதலாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி
» மம்பட்டியான் – திரை விமர்சனம்
» ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு சிக்கல்
» ‘மம்பட்டியான்’ ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்! – தியாகராஜன்
» பிரசாந்த் படத்துக்கு தடை கோரும் மம்பட்டியான் மகன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum