‘மம்பட்டியான்’ ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்! – தியாகராஜன்
Page 1 of 1

‘மலையூர் மம்பட்டியான்…’ 83-ல் வெளிவந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும்
திரும்பிப் பார்க்க வைத்த படம். அதே மம்பட்டியான் தியாகராஜன் இயக்க, மகன்
பிரஷாந்த் இப்போது மம்பட்டியானாக நடிக்கிறார். இதன் பாடலை ஆஹா
எஃப்.எம்.மில் ஆர்.ஜே.க்களை வைத்து வெளியிட்டு அசர வைத்தனர் தியாகராஜனும்
பிரஷாந்த்தும். சீனியர் மம்பட்டியானிடமும் சின்ன மம்பட்டியானிடமும்
பேசினோம்.
இது மாதிரியான வாழ்ந்த கதாபாத்திரங்களைப் பற்றிய படங்களின் வெற்றி இந்த காலகட்டத்தில் சாத்தியமாகுமா…?
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்பவுமே புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு
கொடுப்பார்கள். வித்தியாசமான படங்களை வெற்றி பெற வைப்பார்கள். அந்த வகையில்
‘மம்பட்டியானை’ யதார்த்தமான படமாகவேதான் எடுத்திருக்கிறேன். பறந்து
அடிக்கும் சண்டைகளைத் தவிர்த்து, நம்பும் வகையில் சண்டைக் காட்சிகள்
அமைத்திருக்கிறோம். நான் நடித்த படத்தின் கதையில் சின்னதாக ஒரு மாற்றம்
செய்திருக்கிறோம். அது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். கதையும்
விறுவிறுப்பாக நகரும். அதனால், இது புதிய ‘மம்பட்டியானாகவே’ இருக்கும்.
படப்பிடிப்பு நடந்த பிரம்மாண்ட காடுகளே உங்களை பிரமிக்க வைக்கும்.
இசைக்காகவே பெரிய அளவில் பேசப்பட்ட படம் இது. இதற்கு இளையராஜாவிடம் இசையமைக்கக் கேட்டிருந்தீர்களா?
நான் எப்போது கேட்டாலும் என் படங்களுக்கு இசையமைக்க மறுக்கவே மாட்டார்
இளையராஜா. அப்படியொரு நட்பு எங்கள் இருவருக்கும். ஆனால், இந்த படத்தைப்
பொறுத்தவரையில் இளைய தலைமுறை இசையமைப்பாளர் இருந்தால் இன்னும் சிறப்பாக
இருக்குமென்றுதான் தமனை இசையமைக்க வைத்தோம். ‘காட்டு வழி போறப் பொண்ணே’,
‘சின்னப் பொண்ணு…’ ரெண்டு பாடல்களின் ட்யூன்களையும் மாற்றாமல் அதை
புதுமைப்படுத்திக் கொடுத்தார் தமன். இப்போது பாட்டு யூத்களின் செல்போனில்
கேட்கும் அளவுக்கு ஹிட் ஆயிடுச்சு. டைட்டில் பாடலை நானே பாடியிருக்கேன்.
படத்தின் புரோமோஷன் பாடலை சிம்பு பாடியிருக்கார்.
மம்பட்டியானைப் போட்டுத் தள்ளுற கேரக்டர்ல யார் நடிக்கிறாங்க?
(சத்தமாய் சிரிக்கிறார்…) சஸ்பென்ஸ்க்காக யாரிடமும் இதைச் சொல்லாமல்
வெச்சிருக்கேன். மற்றபடி கவுண்டமணி ரோல்ல வடிவேலு, செந்தாமரைக்கு பதில்
கோட்டா சீனிவாசராவ் வர்றாங்க. இதுல முக்கியமான விஷயம் ‘மலையூர்
மம்பட்டியான்’ படத்தையே சம்பந்தப்பட்ட மலையூரில் எடுக்கவில்லை. ஆனால், இந்த
படத்தை மலையூரில் எடுத்திருக்கிறோம். அந்த ஊர் மக்கள் என்னை ‘மம்பட்டியான்
வந்துட்டாரு’ன்னு கொண்டாடினாங்க. இப்ப அந்த பவரை பிரஷாந்த் தோளில் இறக்கி
வெச்சிருக்கேன், என்று தந்தையாக மாறி அக்கறைப்பட்டார் தியாகராஜன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கூடாது: நடிகர் தியாகராஜன் கோர்ட்டில் மனு
» எனக்கு கிடைத்த மரியாதையை என் மகனுக்கும் பெற்றுத் தரும் ‘மம்பட்டியான்’! – தியாகராஜன்
» மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி
» குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி…!
» பொன்னர் சங்கர்… பிரமிக்க வைக்கும் இயக்குநர் தியாகராஜன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum