புண்ணியம் தரும் புட்லூர்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
புண்ணியம் தரும் புட்லூர்
புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத் தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள் பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள்.
அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள்.
அருகில் தாண்டவராயன் என்னும் திருநாமத்துடன் நடராசரும், விநாயகரும் இம்மூவருக்கும் முன்னாள் உற்சவ நாயகி உள்ளம் கொள்ளை கொள்ளும் சிரிப்புடன் காட்சி தருகிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம்.
அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் வேண்டுதல்களை வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்களை வேண்டிக் கொண்டு தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள்.
வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. சிவராத்திரிக்கு அடுத்த நாள் மயானக் கொள்ளை என்னும் வைபவம் நடைபெறுகிறது. அமாவாசை அன்று மதியம் 1மணி அளவில் மயானத்தில் மண்ணால் உருவாக்கப்பட்ட ஒரு மனித வடிவம் உற்சவமூர்த்தியின் முன்பாக எரியூட்டப்படுகிறது. இதை மகேந்திரன் வதம் என்றும் மகிஷாசூரன் வதம் என்றும் சொல்கிறார்கள்.
மனித வடிவம் எரிந்து முடிந்த பின் மிச்சமாக இருக்கும் மண்ணை மக்கள் முந்தானையிலும் துண்டிலும் முடிந்து எடுத்துச் சென்று வீட்டு வாசலில் கட்டுகிறார்கள். இப்படி செய்வதால் காற்று கருப்பு எதுவும் அண்டாமல் இருக்கும் என்பது ஐதீகம்.
இந்த அம்மனின் சந்தியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும் தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புண்ணியம் தரும் புனித யாத்திரை
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புட்லூர் கோவில் 30 தகவல்கள்
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புண்ணியம் தரும் புனித யாத்திரை
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புட்லூர் கோவில் 30 தகவல்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum