தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புண்ணியம் தரும் புனித யாத்திரை

Go down

புண்ணியம் தரும் புனித யாத்திரை Empty புண்ணியம் தரும் புனித யாத்திரை

Post  meenu Sun Mar 24, 2013 3:10 pm

ஆன்மீக பூமியான இந்தியா முழுவதும் வரலாற்று புகழ்பெற்ற திருத்தலங்கள் அதிகம் உள்ளன. தென் இந்தியாவில் திவ்ய தேசங்கள் அதிகம் உள்ளன. இருந்த போதிலும் தென்இந்திய மக்கள் வடஇந்திய திருத்தலத்திற்கு சென்று வழிபடுவதை பாரம்பரிய பெருமையாகவும் மிகுந்த புண்ணியத்தை தருவதாகவும் கருதுகின்றனர்.

ஏனெனில் தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் அதிகமான புராண இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள திருத்தலங்களும், வரலாற்று சிறப்பு வாய்ந்த தொன்மையான நினைவுச் சின்னங்களும் உள்ளன. மேலும், வட இந்தியாவில் ஜோதிர் லிங்கங்கள் எனப்படும் புகழ் வாய்ந்த 12 நவஜோதிர்லிங்க புனித தலங்களில் 11 தலங்கள் உள்ளன.

உலகப் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு வட இந்தியாவில் அதிகளவில் கோவில்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு தலங்களும் புராண இதிகாசங்களில் நிகழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்து கூறுகின்றன. தென்இந்திய மக்கள், கைலாஷ் யாத்திரை அதிகளவில் மேற்கொள்கிறார்கள்.

வருடாவருடம் இந்த யாத்திரைக்கு பெருமளவில் பக்தர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த யாத்திரை மூலம் தங்களின் பாவங்கள் நீக்கப்பட்டு புண்ணியம் பெறுவதாக கருதுகிறார்கள். இந்த யாத்திரை மற்றும் சில வழிபாட்டுத் தலங்களை மட்டுமே தென்னிந்திய மக்கள் அதிகம் அறிந்து வைத்திருக்கின்றனர். இதற்கு மேலும், பல புண்ணிய தலங்கள் வடஇந்தியா முழுவதும் உள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum