புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
மதுரையில் நடந்து வரும் சித்திரை திருவிழாவின் கடைசி நாள் அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருவார்கள். சித்திரை திருவிழாவில் ரிஷபத்திற்கு மட்டும் இரண்டு நாள் இறைவனைச் சுமக்கும் பாக்கியம் கிடைக்கிறது. ஆறாம் திருவிழாவிலும் ரிஷபமே பவனி வந்தது. எதைத் தவற விட்டாலும், ரிஷப வாகன தரிசனத்தை மட்டும் தவற விடவே கூடாது. அந்தளவுக்கு புண்ணியமான தரிசனம் இது.
ரிஷபம் என்றும் காளை தர்மத்தின் சின்னமாகும். இதன் கட்டான உடல் நமக்கு திடமனது வேண்டும் என்பதையும் கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதை தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும், காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும் ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும், கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி மணிகள் இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன.
ரிஷப தரிசனம் எல்லோருக்கும் எப்போதும் கிடைத்து விடாது. ஏனெனில் அந்த தரிசனம் மட்டும் ஏதோ ஒரு முன் பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். ரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால் இவ்வுலகில் என்னென்ன தான தர்மங்கள் உண்டோ அத்தனையும் செய்த புண்ணியம் கிடைக்கும். இந்த புண்ணியத்தை தனது அடியார்களுக்கு வழங்குவதற்காகவே மீனாட்சியும் சுந்தரேசுவரரும் ஒன்றாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புண்ணியம் தரும் புட்லூர்
» புண்ணியம் தரும் புட்லூர்
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புண்ணியம் தரும் புரட்டாசி - ஸ்ரீவெங்கடாசலபதி வழிபாடு
» புண்ணியம் தரும் புட்லூர்
» புண்ணியம் தரும் புட்லூர்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum