தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அங்காள பரமேசுவரி

Go down

அங்காள பரமேசுவரி Empty அங்காள பரமேசுவரி

Post  birundha Tue Apr 09, 2013 11:03 pm


கைலாயத்தில் ஒரு நாள் சிவபெருமானும், பார்வதி தேவியும் வீற்றிருந்த போது, அங்கு பிருங்கி முனிவர் வந்தார். அவர் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் பார்வதிக்கு கோபம் வந்தது. சிவனிடம் கோபித்து கொண்டு பூமிக்கு வந்தார். தண்டகாருண்யம் என்றழைக்கப்பட்ட தென்ஆற்காடு பகுதியில் வந்து தங்கினாள்.

இதனால் அந்த பகுதி செழிப்பான வனமாக மாறியது. வால்மீகி முனிவர், அந்த வனத்துக்கு வந்திருப்பது பார்வதி என்பதை அறிந்து கொண்டார். அவர் பார்வதியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், "சிவனிடம் மீண்டும் சேர என்ன செய்ய வேண்டும்?'' என்று பார்வதி கேட்டார். அதற்கு வால்மீகி முனிவர் கேதாரகவுரி விரதம் இருக்கும்படி கூறினார்.

அதன்படி பார்வதி விரதம் இருந்ததால், அவருக்கு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று சிவன் காட்சி கொடுத்தார். பார்வதி மீது மனம் இரங்கிய சிவன், "என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார். உடனே பார்வதி "தங்கள் அங்கத்தில் இடது பாகத்தை எனக்குத் தர வேண்டும்'' என்று கேட்டு பெற்றார்.

இப்படி சிவன் அங்கத்தில் பார்வதி இடம் பிடித்ததால், அம்பிகைக்கு, அங்காள பரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டது. பரமேஸ்வரி சிவனை நோக்கி தவம் இருந்த இடம் மேல்மலையனூர் ஆகும். அது போல சிவனும், பார்வதியும் வனத்தில் உலவிய இடம் புட்லூர் என்றழைக்கப்படுகிறது.

புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங்களை விரட்டுகிறாள்.

சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள். மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது.

எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. அங்காள பரமேசுவரியின் அருள் சிறப்பையும் புட்லூர் தலத்தின் மகிமையையும் மாலைமலர் உங்களுக்காக இந்த இலவச புத்தகத்தில் தொகுத்து வழங்குகிறது. ஆற, அமர படியுங்கள்.... அங்காள பரமேசுவரி உங்களுக்கு அருள் செய்வாள்!
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum