தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்

Go down

புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் Empty புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்

Post  amma Sun Jan 13, 2013 12:01 pm

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-

பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் பலன் என்னவோ அவருக்குப் பூஜ்யம்தான். சாப்பிடுவதற்கே கஷ்டம். வறுமை அவரது வீட்டில் நர்த்தனம் ஆடிற்று. வேறு வழியின்றி, அதே ஊரில் உள்ள மகிசுரன் என்பவனை நாடினார். அங்குள்ள பெரும்பாலானவர்களும் தங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் மகிசுரனைத்தான் நாடுவர்.

தங்களிடம் இருக்கும் நிலத்தை அவனிடம் அடமானம் வைத்து, பணம் பெற்று வாழ்க்கையை ஓட்டுவர். மகிசுரனும், கொஞ்சம் கூடக் கூசாமல் வட்டி மேல் வட்டி வாங்கி தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டிருந்தான். பொன்மேனியும் அவனை நாடிச் சென்றார். நாடிச் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

தன்னிடம் இருந்த சிறிதளவு நிலத்தையும் அவனிடம் அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. வட்டியையாவது ஒழுங்காக அடைக்கலாம் என்றால் அதுவும் பொன்மேனியால் முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் சிவராத்திரி வந்தது.

ஊர் மக்கள் அனைவரும் சிவன் ஆலயத்திற்குச் சென்று தொழுது வணங்கி வழிபட்டனர். இரவு முழுவதும் எம்பெருமானை நினைத்து கண்விழித்து சேவித்தனர். ஆனால் அந்த நல்ல விசேஷ நாளில் பொன்மேனியின் நிலை மட்டும் வேறு மாதிரியாக அமைந்தது. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான்.

கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு. அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?

சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான்.

அப்போது அங்கிருந்த மரத்தின் கீழ் ஒரு முதியவரும், மூதாட்டியும் இருப்பதைக் கண்டான். பாவம், வயதான காலத்தில் எங்கிருந்தோ நடந்து வந்த களைப்பில் அங்கு அவர்கள் இளைப்பாறுகின்றனர் போலும் என்று நினைத்தான் அவன். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பது போல் தோன்றவே, அவர்கள் அருகில் சென்றான்.

அப்போது அந்தப் பெரியவர், "தம்பி, எனது மனைவி தாகமாக இருக்கிறாëள். குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?'' என்று கேட்டார். "கண்டிப்பாக உடனே தருகிறேன். என்னுடன் கொஞ்சம் வரமுடியுமா பெரியவரே?'' என்று பரிவுடன் கேட்டான் பொன்மேனி. பெரியவரும், அவனுடன் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்றார்.

தண்ணீர் பிடித்த பின்னர், பெரியவரை அழைத்துக் கொண்டு அதே மரத்தின் அருகே வந்தான். ஆனால் அங்கு தாகத்தோடு அமர்ந்திருந்த அந்த மூதாட்டியைக் காணவில்லை. பொன்மேனி திடுக்கிட்டான். உடனே, "உங்கள் மனைவி எங்கே போய் விட்டார்கள், பெரியவரே?'' என்று கேட்டவாறே முதியவரை நோக்கித் திரும்பினான்.

என்ன ஆச்சர்யம்! அந்த முதியவரையும் காணவில்லை! `எங்கே போனார்கள் இவர்கள் இருவரும் யார் இவர்கள்? எதற்காக இங்கே வந்தார்கள்? தன்னிடம் எதற்காக தண்ணீர் கேட்டார்கள்? ஏன் இப்படித் திடீரென்று மறைந்து விட்டார்கள்? என்ன நடக்கிறது இங்கே? குழப்பம் மற்றும் திகிலுடன் அவன் அப்படியே செயலற்று நின்றான்.

சற்று நேரத்திற்குப் பிறகே அவனால் தன்நிலைக்குத் திரும்ப முடிந்தது. இரவிற்குள் நிலத்தை உழுது பயிரிட வேண்டும் என்பது சட்டென்று அவன் நினைவிற்கு வந்தது. பதற்றத்துடன் மீண்டும் தனது உழவுப் பணியை மீண்டும் துவக்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.

`என்ன அது?' என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக:கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு ஆசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது. "பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வந்த வயதான பெரியவராக சிவபெருமானும்.

வயதான மூதாட்டி போல பராசக்தியாகிய வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்று விட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது.

வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன். கவலைப்படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்த விட்டாய்'' இவ்வாறு அந்த அசரீரி சொன்னது.

பொன்மேனி சுய உயர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்தது கொண்டான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் சேதி காட்டுத் தீயாகப் பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர்.

அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது..

ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலையனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப்படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார்.

அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள்.

அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.*
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum