அங்காள பரமேசுவரி 15
Page 1 of 1
அங்காள பரமேசுவரி 15
1.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சக்தி தலங்களில் பல பெயர்களில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அம்மன்களுக்கு மூல அம்மனாக அங்காள பரமேசுவரி அம்மன் திகழ்கிறாள்.
2.அங்காளம்மன் நாகப்பாம்பின் ஒரு அம்சமாக கருதப்படுகிறாள். இதுவே அங்காள பரமேசுவரியின் தத்துவ விளக்கமாகவும் அமைந்துள்ளது.
3.தமிழ்நாடு முழுவதும் அங்காள பரமேசுவரிக்கு ஆலயங்கள் உள்ள போதும், வட தமிழ்நாட்டில் தான் அங்காள பரமேசுவரிக்கு அதிக அளவில் ஆலயங்கள் உள்ளன.
4.அங்காள பரமேசுவரியின் முதன்மை தலமாக மேல் மலையனூர் கோவில் கருதப்படுகிறது. சமீபகாலமாக புட்லூர் அங்காள பரமேசுவரியம்மன் ஆலயமும் அத்தகைய சிறப்பை பெற்று விடுகிறது.
5.எங்கெல்லாம் கிரீடத்துக்கு மேல் நாகபாம்பு வடிவமைக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் அங்காளபரமேசுவரி அருள் செய்வதாக ஐதீகமாகும்.
6.அரச மரத்தடிகளில் 2 நாக பாம்புகள் பின்னி பிணைந்துள்ள அமைப்புடன் சிலைகளை பார்த்திருப்பீர்கள். அது அங்காளபரமேசுவரியின் அடையாள தத்துவமாகும்.
7.அங்காளம்மன் என்பதே நாளடைவில் அங்காள பரமேசுவரி என்று மருவியுள்ளது.
8.சுயம்பு வடிவான ஆதித்தாயே அங்காளம்மன் ஆக கருதப்படுகிறது.
9.ஒவ்வொரு அங்காளம்மன் கோவிலிலும் புற்று இருப்பதை காணலாம். அந்த மண்புற்று அடியில் நாக வடிவமாகி அமர்ந்த வண்ணம் அங்காள பரமேசுவரி அருள் பாலிப்பதாக ஐதீகம்.
10.அம் என்றால் உள் மற்றும் உள்ளே என்று அர்த்தம். காளம் என்றால் விஷம் என்று பொருள்.நாகப் பாம்புக்குத்தான் உள்ளே விஷம் இருக்கும். அத்தகைய நாக வடிவமாக அம்மன் புற்றுக்குள் இருப்பதால் அந்த அம்மன் அம்+காளம்+ அம்மன்=அங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.
11.அங்காள பரமேசுவரிக்கு ஒருமை தெய்வம், ஆதித்தாய், மூல முதல்வி, தலைமை தாய், தலைமை அம்மன், மூல அம்மன், முதல் அம்மன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
12.மாரியம்மன் வழிபாடு என்பதும் அங்காள பரமேசுவரி வழிபாட்டின் தத்துவம் தான். 13.ஏழைகளுக்கு மிக எளிதாக அங்காள பரமேசுவரி அருள் செய்வாள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
14.சிவபெருமானுக்கு காளன் என்றொரு பெயரும் உண்டு. இதனால் சக்தியாகிய லிங்கரூபிணிக்கு காளி என்று பெயர் ஏற்பட்டது. நாளடைவில் அது அங்காளம்மன் ஆனது.
15.அங்காள பரமேஸ்வரி அம்மன் மல்லாந்து புற்றுவாக இருக்கும் புட்லூரில் தினமும் மஞ்சள் பூசுகிறார்கள். ஒருநாள் மஞ்சள், குங்குமம் தெளிக் காவிட்டாலும் புற்று வளர்ந்து விடுவதாக சொல்கிறார்கள்.''
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அங்காள பரமேசுவரி
» அங்காள பரமேசுவரி 15
» அங்காள பரமேசுவரி
» புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்
» அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
» அங்காள பரமேசுவரி 15
» அங்காள பரமேசுவரி
» புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில்
» அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum