தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அங்காள பரமேசுவரியின் அவதாரம்

Go down

அங்காள பரமேசுவரியின் அவதாரம் Empty அங்காள பரமேசுவரியின் அவதாரம்

Post  birundha Tue Apr 09, 2013 11:05 pm


உலக இயக்கத்திற்காகப் படைப்புத் தொழிலை ஏற்று நின்ற பிரம்மா தனக்குப் படைப்புத் தொழிலுக்கு உதவி செய்வதற்காக 10 பிரஜாபதிகளைப் படைத்தார். அப்பிரஜாபதிகளில் அதிமுக்கியமான பிரஜாபதியே தக்கன் என்ற பிரஜாபதியாவார். தக்கன் கோடான கோடி உயிரினங்கள் தோன்றுதலுக்கும், அனைத்துப் படைப்புகளுக்கும் காரண கர்த்தாவாக விளங்கி நின்றான்.

உலக சுழற்சிக்காக எண்ணற்ற ரிஷிகளையும், முனிவர்களையும் படைத்தார். அத்துடன் 60 பெண்களைப் படைத்து 27 பெண்களைத் தேவலோகத்தில் தேவர்களுக்கு கொடுத்தும் தேவர் வம்சம் விளங்கிட உதவினான். இவர்கள் மூலமே சப்த நட்சத்திரங்களில் அதிமுக்கியமான ஆதிபராசக்தியின் அம்சமான தாட்சாயணி தோன்றினாள்.

தாட்சாயணியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இதனால் தக்கன் சிவனாரின் மாமனார் என்ற மமதையும், செருக்கும், ஆவணமும், அகங்காரமும் கொண்டான். அத்துடன் அனைத்தையும் தானே படைப்பதாக நினைத்து எல்லாம் வல்ல படைப்பாற்றல் தனக்கே உள்ளது என்று நினைத்தான்.

ஒருநாள் அவன் சிவபெருமான் வீற்றிடமான கைலாயத்திற்குத் தன்னிச்சையாகச் செல்கையில் சிவனாரின் மெய்க்காப்பாளராகிய நந்தித் தேவர் தடுத்து நிறுத்தினார். அதனால், அவமானம், தலைகுனிவு ஏற்பட்டு அனைத்துப் பேராற்றலையும் பெறத்தக்க விதத்தில் மகா யாகத்தைச் செய்ய தீர்மானித்தான்.

சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பின்றி மற்ற அனைவரையும் அழைத்து யாகத்தைத் தொடங்கினான். இதனால் தாட்சாயணி ஆவேசமாகி ஒன்று திரண்டு சக்தியின் வடிவமாக மாறினாள். தக்கன் செய்யும் யாகம் அழிய சாபமிட்டாள். அத்துடன் தாட்சாயணி தன் பூத உடலைத் தக்கன் யாக வேள்வித் தீயில் விழுந்து கருகி அழித்தாள்.

இதனால் தாட்சாயணி தன் உடலை அழித்து உருவமற்ற அங்காளி ஆக மாறினாள். ஆனால் உருவமாக பார்வதி என்றும் ஆகி நின்றார். இந்த செய்தியை அறிந்த சிவபெருமான் கடும் துயரம் கொண்டார். அந்த கோப சீற்றத்தில் தக்கன் யாகச் சாலையை அடைந்து தாட்சாயணி தேவியின் தீயில் கருகிய பூத உடலை யாகக் குண்டத்தில் இருந்து எடுத்துத் தன் தோள்மீது சுமந்த வண்ணமாக அகோர நர்த்தன தாண்டவம் ஆடினார்.

இதனால் தாட்சாயணி தேவியின் உடல் உறுப்பு பாகங்கள் ஆடை அணிகலன்கள், மற்றும் துணி மணி வகைகள் அனைத்தும் உலகம் எங்கும் உதிர்த்து விழுந்தன. இப்படி தாட்சாயணி உடல் உறுப்புகள் சிதறி, சிதறுண்ட, பாகங்கள், உடல் உறுப்பு பாகங்கள், ஆடை அணிகலன்கள் துணி மணிகள் விழுந்த இடங்களே இன்று அங்காள பரமேசுவரியின் சக்தி பீடங்களாகத் தோன்றிக் காட்சி அளிக்கின்றன. சக்தி பீடங்கள் எண்ணிக்கை பரவலாக, பலவாறாக 6400 என்றும், 1008 என்றும், 108 என்றும் 64 என்றும், 51 என்றும் பல வகையாக வகைபடுத்தப்பட்டுள்ளன.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum