எனக்கு கிடைத்த மரியாதையை என் மகனுக்கும் பெற்றுத் தரும் ‘மம்பட்டியான்’! – தியாகராஜன்
Page 1 of 1

மலையூர் மம்பட்டியான்… எண்பதுகளில் ஒரு புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் உருவாக்கிய படம். இளையராஜா இசையில் வெளியான சின்னப் பொண்ணு…, காட்டு வழி… போன்ற பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இருக்காது எனும் அளவுக்கு பட்டி தொட்டியெங்கும் படு பிரபலம்!
இந்தப் படத்தை மறைந்த ராஜசேகர் இயக்கியிருந்தார். இதே படத்தை பின்னர் ரஜினியை வைத்து இந்தியில் கங்குவா என்ற பெயரில் இயக்கி பெரும் வெற்றி பெற்றார் ராஜசேகர்.
கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தை ‘மம்பட்டியான்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தில் மம்பட்டியானாக வருபவர் தியாகராஜனின் மகன் பிரசாந்த்.
தனது லட்சுமி சாந்தி மூவீஸ் பேனரில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கும் தியாகராஜன், படம் குறித்து பேசுகையில், “எனக்கு இந்த இன்டஸ்ட்ரியில் ஒரு இமேஜையும் பெரிய புகழையும் தந்த படம் மலையூர் மம்பட்டியான். அதைவிட பெரிய புகழை என் மகனுக்கும் இந்தப் படம் தரும் என நம்புகிறேன்.
இந்த வேடத்தை பிரசாந்த் மிகச் சிறப்பாக செய்துள்ளார் என்று சொல்வது வழக்கமான வார்த்தை ஆகிவிடும். நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அன்றைக்கு என்னை தியாகராஜன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மம்பட்டியான் என்றே கூப்பிடுவார்கள். நாளை இந்தப் படம் வந்தபிறகு பிரசாந்தையும் அப்படி அழைத்தால் ஆச்சரியமில்லை,” என்றார்.
படத்தின் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு அசத்தலான ட்ரெயிலரை சமீபத்தில் திரையிட்டுக் காட்டினார்கள். பொன்னர் சங்கருக்கு ஒளிப்பதிவு செய்து பலரின் பாராட்டுக்களையும் பெற்ற ஷாஜி குமார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்.
தமன் இசையமைத்துள்ளார். இளையராஜாவின் புகழ்பெற்ற அந்த இரு பாடல்களையும் இதில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார் தமன்.
அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப மலையூர் மம்பட்டியான் வந்தது. இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து மாற்றங்கள் செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். பிரசாந்த் எதிர்ப்பார்த்த பிரேக் இதில் கிடைக்கும்,” என்கிறார் தியாகராஜன் நம்பிக்கையுன்.
நல்ல நடிகரான பிரசாந்துக்கு இந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்பதே நமது வாழ்த்தும்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘மம்பட்டியான்’ ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்! – தியாகராஜன்
» மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கூடாது: நடிகர் தியாகராஜன் கோர்ட்டில் மனு
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
» மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி
» மைக்கேல் ஜாக்சனைப் பாதித்த ‘விடிலிகோ’ சரும நோய் மகனுக்கும் வந்தது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum