பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
Page 1 of 1
பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
பெண்களுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. அவர்களின் மரியாதையை குறைப்பது சினிமாக்கள்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகையும், சினிமா இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் சிறப்பான இடத்தை தக்க வைத்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் படியுங்களேன். சினிமாவில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரம், விளம்பரம் என பிஸியாக நடித்தாலும் யுத்தம் செய்த திரைப்படம்தான் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த படத்திற்காக மொட்டை அடித்துக்கொண்டது ஒரு ஜாலியான அனுபவம். மொட்டை அடித்தால் எதையோ இழந்தது போல நினைப்பார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை. அதே மொட்டையுடன் பட்டுசேலை கட்டிக்கொண்டு, ஜிமிக்கு அணிந்து கொண்டு மலேசியா போயிருந்தேன். எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். இயக்குநராக மாறினேன் எனக்கு சினிமா மீதுள்ள காதலால் ஆரோகணம் படம் எடுத்தேன். அதுவரை குறும்படங்கள் மட்டுமே எடுத்த நான் விஜியை வைத்து ஆரோகணம் படம் எடுத்தது பெறும் வரவேற்பை பெற்றது. முதலில் சினிமா இயக்குவது பற்றி பயம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. தயாராக இருக்கவேண்டும் இந்த உலகத்தில் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் நடக்கின்றன. பெண்கள் எப்பவும், எதற்கும் தயாராக இருக்கவேண்டும். டெல்லியில் நடந்த பாலியல் வன் கொடுமை குரூரமானது. அதுபோல பல கொடுமைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கவேண்டும். ஆண்களின் மனநிலை மாறனும் ஒரு பெண் நம்மை எதிர்ப்பதா என்ற எண்ணத்தில்தான் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய தூண்டியுள்ளது. அந்த மாணவி கவர்ச்சியாக உடை அணிந்திருக்கவில்லை. அந்த ஆணை எதிர்த்து பேசியதால்தான் அவளை பலாத்காரம் செய்துள்ளனர். ஆண் என்கின்ற இந்த மனநிலைதான் இதற்குக் காரணம். பெண்ணுக்கு மரியாதை கவர்ச்சியான ஆடைகள் அணிவதுதான் ஆண்களின் மனது பாதிக்க காரணம் என்கின்றனர். பெண்களின் மரியாதை கெட்டுப்போவதற்கு சினிமாவும் விளம்பர உலகமும் காரணமாக இருக்கிறது. ஒரு ஆண் ஸ்ப்ரே அடித்துக் கொண்ட உடன் அவன் பின்னால் ஏராளமான பெண்கள் போவதைப் போல காட்டுகின்றனர். ஆனால் இது தவறுதானே. சினிமாவிலும் பெண்கள் கவர்ச்சியாகத்தான் பயன்படுத்தப்படுகின்றனர். இதில் அந்த இயக்குநரை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. அந்த நடிகைக்கும் இதில் பங்கு உண்டு. நான் இந்த மாதிரி உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்று கூறலாமே. எனவே பெண்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை கவனிக்கணும் சினிமா இயக்கம், சின்னத்திரையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’என்று பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. என் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறேன். கொஞ்சம் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கி அவற்றை கவனித்துவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன் என்று பொறுப்பான அம்மாவாக பதில் சொன்னார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
» சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு
» மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
» பாலிவுட் - ரேவதி பாதையில் லட்சுமி ராமகிருஷ்ணன்
» அன்பாக மட்டுமல்ல ஆணவமாகவும் நடிப்பேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்
» சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு
» மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
» பாலிவுட் - ரேவதி பாதையில் லட்சுமி ராமகிருஷ்ணன்
» அன்பாக மட்டுமல்ல ஆணவமாகவும் நடிப்பேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum