தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டேம் 999 படத்துக்கு ஆதரவு: நடிகை ரீமா,வினய்க்கு தடை?

Go down

டேம் 999 படத்துக்கு ஆதரவு: நடிகை ரீமா,வினய்க்கு தடை? Empty டேம் 999 படத்துக்கு ஆதரவு: நடிகை ரீமா,வினய்க்கு தடை?

Post  ishwarya Tue Apr 09, 2013 6:07 pm

பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல். இவர் தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தார். ஜீவாவின் கோ படத்தில் கவுரவ தோற்றத்தில் வந்தார்.

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள டேம் 999 படத்துக்கு ரீமா கல்லிங்கல் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் மலையாள இயக்குனர் சோகன் ராயால் எடுக்கப்பட்ட இப்படம் தமிழர்களுக்கு எதிரானது என அனைத்து கட்சிகளும் எதிர்த்தன.

இதையடுத்து அரசு தடை விதித்தது. ஆனால் ரீமா கல்லிங்கல் இதனை எதிர்த்துள்ளார். இப்படத்தில் நடித்த வினய்யும் டேம் 999 படத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரீமா கல்லிங்கலும் வினய்யும் டேம் 999 படத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாறு அணை பற்றி கருத்து சொல்ல நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு. அந்த குழு அணை வலுவாக இருக்கிறது என்று கூறி உள்ளது.

இதையடுத்து கேரள அரசு புதிய அணை கட்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் கேரள அரசு தீர்ப்பை மதிக்காமல் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்தனைக்கு பிறகும் அணை உடைவது போன்று கேரள அரசுக்கு சாதகமான படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளனர். இப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரீமா கல்லிங்கல், வினய் போன்றோர் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum