தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை நிகிதாவுக்கு குஷ்பு ஆதரவு!

Go down

நடிகை நிகிதாவுக்கு குஷ்பு ஆதரவு! Empty நடிகை நிகிதாவுக்கு குஷ்பு ஆதரவு!

Post  ishwarya Tue Apr 16, 2013 12:13 pm


நடிகர் தர்ஷனுடன் நிகிதா தகாத உறவு வைத்திருப்பதாக அவரது மனைவி விஜயலட்சுமி குற்றம் சாட்டினார். இதனால் தர்ஷன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நிகிதா மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தஷ்ஷனுடன் தவறான தொடர்பு இல்லை என்று நிகிதா மறத்துள்ளார். தடை காரணமாக நிகிதாவுக்கு படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கைவசம் தற்போது 3 கன்னட படங்கள் உள்ளன.

நிகிதாவுக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, கணவன்-மனைவி மற்றும் பெண்களின் சொந்த விவகாரங்களில் தலையிடுவதற்கு தயாரிப்பாளர்கள் யார்? அவர்கள் தண்டிக்க நினைத்திருந்தால் முதலில் நடிகர் தர்ஷனை தான் தண்டித்து இருக்க வேண்டும். ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த விஷயத்தில் தான் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.நிகிதாவுக்கு கர்நாடகத்தில் ஆதரவு பெருகுகிறது. தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததை பல சங்கங்கள் கண்டித்து உள்ளன.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை தாரா கூறும் போது, நிகிதா மீது கடும் நடவடிக்கை எடுத்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார். இப்பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனை நடத்தாமல் தடை விதித்துள்ளனர் என்றும் கூறினார். கன்னட இயக்குனர்கள் சங்கமும் நிகிதாவுக்கு தடை விதித்ததை எதிர்த்து உள்ளது. அச்சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ரமேஷ் கூறும்போது, நிகிதாவுக்கு பெரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்றார். தடை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை என்றும் குறை கூறினார்.

நிகிதா நடிக்கும் “காட்டான் பெட்” படத்தை இயக்கி வரும் ஓம்பிரகாஷ்ராவ் கூறும் போது, தயாரிப்பாளர் சங்கத்தின் தடை உத்தரவுக்கு நான் அடிபணிய மாட்டேன். நிகிதாவை வைத்து படத்தை இயக்குவேன் என்றார். தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர்கள் கிரிஷ் கேசர வல்லி, சுரேஷ், நடிகை ஜெயமாலா, கன்னட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் சந்தேஷ் நாகராஜ் ஆகியோரும் நிகிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum