25 லட்ச ரூபாய் ! : திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு
Page 1 of 1

9வது சென்னை உலக திரைப்பட விழா டிசம்பர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை
நடைபெற இருக்கிறது. இதில் இந்த ஆண்டு சுமார் 154 படங்களை திரையிட
இருக்கிறார்கள்.
154 படங்களில் 133 படங்கள் 44 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
இம்முறை உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சத்யம், ஐநாக்ஸ், பிலிம்
சேம்பர் என சென்னையில் ஐந்து திரையரங்குகளில் திரையிட இருக்கிறார்கள். 14ம்
தேதி இவ்விழாவை சேகர் கபூர் துவக்கி வைக்க இருக்கிறார்.
தமிழில் இருந்து 12 படங்கள் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ‘அவன்
இவன்’, ‘ஆடுகளம்’, ‘மைதானம்’, ‘முரண்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘வாகை சூட
வா’, ‘வர்ணம்’, ‘வெங்காயம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தூங்காநகரம்’,
‘அழகர்சாமியின் குதிரை’, ‘கோ’ஆகிய படங்கள் இம்முறை திரையிட தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவிற்கு தமிழக முதல்வர்
ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனால் CIFF குழுவினர் பெரும்
மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து சுஹாசினி ” சென்னையில் நடைபெற உள்ள திரைப்பட விழாவிற்கு
முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். அதற்காக எங்களது
நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சரத்குமார், நான், தங்கராஜ் சார், ஜெயேந்திரா சார் ஆகியோர் இணைந்து
தமிழக முதல்வரை சந்திக்க சென்றோம். திரைப்பட விழா குறித்து அனைத்து
தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
கண்டிப்பாக அடுத்த ஆண்டு 10வது திரைப்பட விழா பிரம்மாண்டமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி
வருகிறது. இந்நேரத்தில் அதை தெளிவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறேன்.
அக்டோபர் 24, 2010 முதல் அக்டோபர் 23, 2011 வரை வெளிவந்த படங்கள் மட்டுமே
தேர்வு செய்யப்பட்டுள்ளன. படத்தின் தயாரிப்பாளர்கள் ENGLISH SUB TITLES
போட்டு படத்தினை எங்களுக்கு அனுப்ப வேண்டும். எங்களுக்கு வந்த படங்களில்
இருந்து மட்டுமே தேர்வு செய்து இருக்கிறோம். ” என்று தெரிவித்தார்.
இம்முறை CIFF புதிதாக நிறைய வசதிகளை செய்துள்ளது. இத்திரைப்பட விழாவைக் காண சினிமா ஆர்வலர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெர்மன் திரைப்பட விழாவிற்கு 4 தமிழ் படங்கள் தேர்வு
» இந்தியத் திரைப்பட விழாவிற்கு விளம்பரத் தூதுவராக வித்யாபாலன் மீண்டும் தேர்வு
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum