தங்கர்பச்சான் பேச்சை எங்கு கேட்பது? – வைரமுத்து தமாஷ்
Page 1 of 1

சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சீனு ராமசாமி இயக்கிய
தென்மேற்கு பருவக்காற்று படமும், லீனா மணிமேகலையின் செங்கடல் படமும்
திரையிடப் படவில்லை. இதற்கு இயக்குனர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு
தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தனது சங்கமே இந்த விழாவை
புறக்கணித்திருப்பாகவும் அறிவித்துவிட்டது. இந்த போர்மேகம் இன்று காலையில்
நடந்த கொள்ளைக்காரன் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்பட்டது.
விதார்த் நடித்திருக்கும் இந்த புதிய படத்தை தமிழ்ச்செல்வன்
இயக்கியிருக்கிறார். இவரை பற்றி தனது உரையில் மிக அழகாக குறிப்பிட்டார்
கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ்செல்வனின் இயற்பெயர் சந்திரன். அதுவே நல்ல
பெயர்தான். அதை எதற்கு தமிழ்ச்செல்வன் என்று மாற்றினார் என்று யோசித்தேன்.
சந்திரனுக்கு தேய்பிறை உண்டு. ஆனால் தமிழுக்கு கிடையவே கிடையாதே என்றார்.
முன்னதாக பேசிய தங்கர்பச்சான் உரையில் வழக்கம் போலவே செம சூடு.
தமிழனுக்கு எங்கேயும் மரியாதை இல்லை. முல்லை பெரியார் பிரச்சனையில்
கட்சிகளும், அரசாங்கங்களும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் எதுவுமே நடக்கப்
போவதில்லை. இனி அரசாங்கத்தை நம்பி பயன் இல்லை. நமது எதிர்ப்பை காட்ட
வேண்டும் என்றால் இதுவரை வாங்கிய தேசிய விருதுகள் அத்தனையையும் அவர்கள்
முகத்தில் விட்டெறிய வேண்டும். எனக்கு தேசிய விருது கிடைத்திருந்தால்
வாங்குகிற மேடையிலேயே அதை செய்திருப்பேன் என்றார் ஆத்திரத்தை அடக்க
முடியாமல். இவர் பேசியதிலேயே உட்சபட்ச கொடுமை, இதுபோன்ற விழாக்களெல்லாம்
எதற்கு? பேசாமல் இதற்கெல்லாம் தடை விதிக்க வேண்டும் என்றார்.
தனது உரையில் இதுபற்றி குறிப்பிட்ட வைரமுத்து, இதுபோன்ற
விழாக்களையெல்லாம் தடைசெய்ய வேண்டும் என்றார் தங்கர்பச்சான். கண்டிப்பாக
இதுபோன்ற விழாக்கள் வேண்டும். இல்லையென்றால் தங்கர்பச்சான் பேச்சையெல்லாம்
எங்கு போய் கேட்டுத் தொலைப்பது என்றாரே பார்க்கலாம்.
இவர்கள் பேசிய அத்தனை பேச்சும் கொள்ளைக்காரன் படத்தை பற்றியோ, பாடலை பற்றியோ இல்லாததுதான் பரிதாபம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடலில் வைரமுத்து சன் ஆஃப் வைரமுத்து
» ‘வடிவேலு நடிக்கிறாரா… போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!’ – சிங்கமுத்து
» தங்கர்பச்சான் படத்துக்கு வரி விலக்கு
» தமாஷ் நடிகருடன் ஜோடி சேர மறுத்த நடிகைகள்!
» தமிழ் சினிமா என்னை அவமானப்படுத்தியது – தங்கர்பச்சான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum