ஏகாதசி மகிமை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஏகாதசி மகிமை
ஏகாதசி என்பது ஓர் புண்ணியகாலம் ஆகும். பரமாத்மாவுக்குப் பரமப்ரியமான திதி அது. அதைப் போற்றாத புராணமில்லை. அதை துதிëக்காத தர்ம நூலில்லை. ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலுள்ளோர் அனைவரும் அதை அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென பகவான் ஆணையிட்டார்.
கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமில்லை. விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை. தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை. காயத்ரியை விட உயர்ந்த மந்திரமில்லை. ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என ஒரு மிக்கப் பதினெண் புராணங்களும் அதைப் போற்றுகின்றன. அத்தகைய ஏகாதசி எப்படி உண்டானது? அதை எங்ஙணம் அனுஷ்டிக்க வேண்டும்?
ஏகாதசிகள் எத்தனை? அவைகளின் பெயர் என்ன? யார்அதை அனுஷ்டித்தனர்? அவைகளின் பெயர் என்ன? யார் அதை அனுஷ்டித்தனர்? என்ன பயன் பெற்றனர்? என்று நாம் அறிய வேண்டாமா? பதினெண் புராணங்களில் பத்மபுராணம் மிகச் சிறந்தது. அதிலும் உத்தரகாண்டம் உத்தமமானது என்பர்.
ஒரு சமயம் உத்தம பக்தரான நாரதரிஷி கைலையங்கிரி சென்றார். நந்தியை வணங்கி விடைபெற்றார். உள்ளே சென்று உமாபதியைத் தரிசித்தார். அவர் கால்களில் விழுந்து துதித்தார். பக்தனை ஆசிர்வதித்து,பகவான் யாதுவரம் வேண்டுமென்றார். ஏகாதசிகளின் வரலாற்றை விரிவாக உரைத்தருள வேண்டு மென்றார் நாரதர்.
கைலாச நாதர் கூறினார்:- இதே விஷயத்தை முன்னொரு சமயம் தர்மராஜன் கண்ணனை வினவினார் கிருஷ்ணன் தர்மருக்கு உறைத்தவண்ணம் யான் விளம்புகிறேன் கேள் என்று கூறி ஏகாதசி சிறப்பை கூறினார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum