கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காங்கோ பயணம்
Page 1 of 1
கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காங்கோ பயணம்
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், இங்கிலாந்து நாட்டு வெளியுறவு துறை மந்திரி வில்லியம் ஹேக் உடன் ஜனநாயக குடியரசு நாடான காங்கோவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள பெண்களிடம் போரின்போது நடைபெறும் கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
இது குறித்து ஏஞ்சலினா ஜூலி கூறும்போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும். ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை கற்பழிப்பு பாதிப்பில் இருந்து எவ்வாறு உலக அளவில் காக்க போகிறோம் என தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இன்னும் பல்வேறு நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார். இதற்கு தகுந்த நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்காவிட்டால், கற்பழிப்பு குற்றத்தை தடுக்க வேண்டிய முதன்மை பணிகளை விடுத்து நாம் வழக்கம்போல் இத்தகைய கொடுமைகளை கண்டு அதற்கேற்ப வீணாக பேசி கொண்டும், பாதிப்புக்கு ஆளானவர்களை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டும் இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி
» பள்ளிக்கூடம் அமைக்க ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது நகைகளை விற்று நிதி திரட்டுகிறார்
» ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு விரைவில் திருமணம்.
» ஆப்கானிஸ்தானில் பெண் குழ்ந்தைகளுக்காக பள்ளிக்கூடம் திறந்தார் ஏஞ்சலினா ஜூலி
» புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்! ஜெயராம் வலியுறுத்தல்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum