தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்! ஜெயராம் வலியுறுத்தல்!!

Go down

புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்! ஜெயராம் வலியுறுத்தல்!! Empty புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்! ஜெயராம் வலியுறுத்தல்!!

Post  ishwarya Mon Apr 01, 2013 2:34 pm

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு சென்ற நடிகர் ஜெயராம் அங்கு சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார். மேலும் புத்தாடைகளும் வழங்கி அவர்களுடன் விளையாடினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புற்றுநோய் என்பது அணு அணுவாக மனித உயிர்களை சாகடிக்கும் கொடிய நோய் ஆகும். இதன் மூல காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரபலங்கள் முதல் சிறு குழந்தைகள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடை பிணங்களாக வாழ்வது பரிதாபத்துக்குரியதாகும். புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளேன். திருவனந்தபுரம் புற்றுநோய் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினேன். எந்த பாவமும் அறியாத அக்குழந்தைகளின் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்கின்றபோது கவலை நம்மை குடிக்கொள்கிறது, என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்: நடிகர் ஜெயராம் பேட்டி
» கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காங்கோ பயணம்
» தமிழ்ப் பெண்களிடம் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கிறேன்: நடிகர் ஜெயராம்
» விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்
» விஜய்க்கு இணையான வேடத்தில் ஜெயராம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum