1993 மும்பை குண்டு வெடிப்பு: நான் சரணடைய போகிறேன் - சஞ்சய் தத் பேட்டி
Page 1 of 1

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்தி நடிகர் சஞ்சய் தத் சரணடைய போவதாகவும், மன்னிப்பு கேட்டு முறையிட போவதில்லை என்றும் கூறியுள்ளார். 1993 மும்பை குண்டு வெடிப்பின் போது ஏ.கே.56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்துக்காக நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கு தொடர்பாக கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. மேலும், குற்றவாளிகள் அனைவரும் 4 வாரங்களுக்குள் சரண் அடைய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சஞ்சய் தத் ஏற்கனவே 1½ ஆண்டு காலம் சிறையில் இருந்து விட்டதால், மேற்கொண்டு 3½ ஆண்டு மட்டும் சிறை தண்டனை அனுபவித்தால் போதும்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்தி நடிகர் சஞ்சய் தத், தான் சரணடைய போவதாக கூறியுள்ளார். மேலும், நான் மன்னிப்பு கோரி முறையிட மாட்டேன் என்று கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசியபோது சஞ்சய் தத் அழுதுவிட்டார். சஞ்சய் தத், நான் சட்டத்திற்கு கீழ்படியும் இந்திய குடிமகன். நான் சுப்ரீம் கோர்ட் மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். நான் அனைத்து உத்தரவுக்கும் கீழ்படிவேன். நான் கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் சரண் அடைவேன். நான் மன்னிப்புக்கு முறையிட மாட்டேன என்று கூறியுள்ளார்.
நான் நாட்டிற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கூறிய சஞ்சய் தத், நான் மன்னிப்பு வேண்டி செல்ல மாட்டேன், இது குறித்து எந்த விவாதமும் இல்லை என்று கூறியுள்ளார். நான் எனது ஆதரவாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் தண்டனை அறிவித்த பிறகு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கட்ஜூ, சஞ்சய் தத்துக்கு பொது மன்னிப்பு வழங்கலாம் என்று கூறியிருந்தார். மேலும், இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத போவதாக கூறியிருந்தார். தற்போது, இது குறித்து பேசியுள்ள கட்ஜூ, நான் சஞ்சய் தத்துக்காக மன்னிப்பு கேட்டு முறையிட போவதாக கூறியுள்ளார். சஞ்சய் தத் வேண்டுமானால் மன்னிப்புக்கு முறையிடாமல் இருக்கலாம். ஆனால் நான் முறையிட போகிறேன். சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கலாம் என தான் உணருவதாக கூறியுள்ளார்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பாகிஸ்தானுக்கு வந்துவிட்டால் ஷாருக்கானுக்கு உரிய மரியாதை கிடைக்கும்: மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி அழைப்பு
» சஞ்சய் தத் சரணடைய 4 வாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» நகுலின் நான் ராஜா ஆகப் போகிறேன்!
» நான் ராஜாவாகப் போகிறேன்! – ஒரு விறுவிறு அரசியல் த்ரில்லர்!
» ஆஸ்கார் விருதை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum