தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்கார் விருதை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

Go down

ஆஸ்கார் விருதை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி Empty ஆஸ்கார் விருதை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

Post  ishwarya Thu Apr 18, 2013 12:29 pm

இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார் சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் கூறியதாவது:-

2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்.

இவ்வாறு இஸ்மாயில் தர்பார் கூறினார்.

அவரிடம் நிருபர்கள் ஏ.ஆர்.ரகுமான் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? எதை வைத்து இந்த குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு இஸ்மாயில் தர்பாரால் பதில் சொல்ல முடியவில்லை. இதையடுத்து இஸ்மாயிலுக்கு பல்வேறு துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் மீது தேவை இல்லாமல் புழுதி வாரி தூற்றக்கூடாது என்று இந்திப்பட உலகத்தினர் கூறியுள்ளனர்.

இந்தியர்களுக்கு ஆஸ்கார் விருது மூலம் பெருமை தேடி தந்தவர் ரகுமான். அவரை பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று மற்றொரு இசை அமைப்பாளர் லலித் பண்டிட் கூறினார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்கப்பட்டது. உடனடியாக அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், ஆஸ்கார் விருதுகளை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. 3 ஆயிரம் மக்களால் விருதுகள் தேர்வு நடக்கிறது. எப்படி பணம் கொடுத்து வாங்க முடியும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'இனிமேல் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைப்பேன்': ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
» இனிமேல் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைப்பேன்': ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
» பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் பேட்டி!
» 1993 மும்பை குண்டு வெடிப்பு: நான் சரணடைய போகிறேன் - சஞ்சய் தத் பேட்டி
» நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை! – ரஞ்சிதா திடீர் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum