தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழாய்களை அகற்றிவிட்டு நிலத்தை விவசாயிகளிடம் ‘கெயில்’ ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசின் முடிவு, ஐகோர்ட்டில் தாக்கல்

Go down

குழாய்களை அகற்றிவிட்டு நிலத்தை விவசாயிகளிடம் ‘கெயில்’ ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசின் முடிவு, ஐகோர்ட்டில் தாக்கல்  Empty குழாய்களை அகற்றிவிட்டு நிலத்தை விவசாயிகளிடம் ‘கெயில்’ ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசின் முடிவு, ஐகோர்ட்டில் தாக்கல்

Post  amma Thu Apr 04, 2013 6:09 pm



கேரளா–கர்நாடகா இடையே தமிழகம் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றிவிட்டு, விவசாய நிலங்களை முன்னிருந்தது போல மீண்டும் விவசாயிகளிடம் கெயில் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு கூறியுள்ளது.

7 மாவட்டங்கள்

இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களை எளிதில் கொண்டு செல்வதற்கு வசதியாக உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு வழியாக கேரளா–கர்நாடகா இடையே எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.கொச்சி–கூட்டநாடு– மங்களூர் – பெங்களூர் இடையே குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

போராட்டம்

இந்த குழாய்களை பதிப்பதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்த கெயில் நிறுவனம் முன்வந்துள்ளது. அந்த வகையில் பல விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அதை எதிர்த்து அந்தந்த மாவட்டங்களில் விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்,எனவே குழாய் பதிக்கும் பணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் கெயில் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் கெயில் நிறுவனம் அப்பீல் தாக்கல் செய்தது. அந்த வழக்கில், 7 மாவட்ட கலெக்டர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், நில உரிமையாளர்கள், கெயில் நிறுவன பிரதிநிதிகளை அழைத்து தலைமைச்செயலாளர் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

இந்த நிலையில் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, கலெக்டர்கள் சண்முகம் (ஈரோடு), கோவிந்தராஜ் (திருப்பூர்), லில்லி (தர்மபுரி), கருணாகரன் (கோவை), ஜெகநாதன் (நாமக்கல்), மகரபூஷணம் (சேலம்), பிரகாஷ் (கிருஷ்ணகிரி) மற்றும் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கந்தசாமி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

தற்போதைய நிலை

அதில், டிவிஷன் பெஞ்ச் உத்தரவுப்படி அந்த கூட்டத்தை தலைமைச்செயலாளர் நடத்தவில்லை. நடத்தப்பட்ட கூட்டத்திற்கு, விவசாயிகள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் எங்கள் நிலத்தை பார்ப்பதற்கு சென்றால், எங்களை கைது செய்துவிடுவதாக போலீசார் அச்சுறுத்துகின்றனர். எனவே ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர், குழாய் பதிக்கும் பணியில் அப்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 27–ந்தேதி உத்தரவிட்டனர்.

தலைமைச்செயலாளர் கூட்டம்

இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–கோர்ட்டு உத்தரவிட்டபடி கூட்டத்தை தலைமைச்செயலாளர் நடத்தவில்லை என்று விவசாயிகள் சங்கம் கூறியது. மேலும் குழாய்களை பதிக்கும் பணியும் நிறுத்தப்படவில்லை என்று கூறப்பட்டது.அதைத்தொடர்ந்து தொழில்துறை முதன்மைச்செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த மார்ச் 6, 7, 8–ந் தேதிகளில் தலைமைச்செயலாளர் கூட்டம் நடத்தினார்.

என்னென்ன முடிவுகள்?

கெயில் அதிகாரிகளின் முன்னிலையில், இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் 134 கிராமத்து மக்கள், நில உரிமையாளர்களை அழைத்து பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை வருமாறு:–

*தமிழகத்தில் எந்த விவசாயிகளின் விளைநிலங்களையும் பாதிக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக கியாஸ் குழாய்களை பதிப்பதற்கு கெயில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அதேநேரத்தில் குழாய்களில் கொண்டு செல்லப்படும் எரிவாயுவை தமிழகத்திற்கும் சப்ளை செய்ய தேவையான நடவடிக்கையை கெயில் எடுக்க வேண்டும்.

*விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் உடனடியாக நிறுத்த வேண்டும்.

*குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டுள்ள ஆழமான குழிகள் அனைத்தையும் உடனே மூடிவிட்டு, முன்பு எப்படி நிலம் இருந்ததோ, அதே நிலைக்கு நிலத்தை மாற்றி அவற்றை விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு கெயில் ஒப்படைக்க வேண்டும்.

*நிலங்களில் மீண்டும் விவசாயம் நடப்பதற்கு வசதியாக, அங்கு பதிக்கப்பட்டு இருக்கும் அனைத்து குழாய்களையும் கெயில் உடனே எடுக்க வேண்டும்.

*குழாய் பதிக்கும் பணியின்போது, விவசாய நிலத்தில் இருந்த பழ மரங்கள் போன்றவற்றை இழந்த விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டை உடனே கெயில் வழங்க வேண்டும்.

கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டிவிஷன் பெஞ்ச் உத்தரவுப்படி, கூட்டம் நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. எனவே வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

கோர்ட்டுக்கு போகலாம்

இந்த முடிவுகளால் கெயில் நிறுவனத்துக்கு பாதிப்பு இருந்தால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட கோர்ட்டை கெயில் தனி வழக்கின் மூலம் அணுகலாம். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் மூன்று நாட்களுக்குள் கெயில் நிறுவனத்துக்கு அரசு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என போராட்டங்கள்
» தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய சஞ்சய் தத் முடிவு
» \தமிழக அரசின் விடுமுறை அறிவிப்பையும் மீறி தீவிரமானது மாணவர் போராட்டம்!
» ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட்டணி கட்சிகளின் கருத்தைக்கேட்டு மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்
» நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum