தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓகே.ஓகே.யில் கஷ்டப்பட்டு நடித்தேன் : ஹன்சிகா!

Go down

ஓகே.ஓகே.யில் கஷ்டப்பட்டு நடித்தேன் : ஹன்சிகா! Empty ஓகே.ஓகே.யில் கஷ்டப்பட்டு நடித்தேன் : ஹன்சிகா!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:33 pm

ஓகே. ஓகே., படத்தில் ஒரு வருடம் கஷ்டப்பட்டு நடித்தேன், என்று நடிகை
ஹன்சிகா கூறியுள்ளார். சின்னத்தம்பி படத்தில் வரும் குஷ்பு போல ஓகே.ஓகே
படத்தில் மெழுகு பொம்மையாக வலம் வருகிறார் நடிகை ஹன்சிகா. ரசிகர்களை
வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் குறித்து
ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நான்
நடித்துள்ள மீரா கேரக்டர் மிகவும் சவாலாக இருந்தது. மற்றவர்களிடம்
கோபமாகவும் பிறரை இம்சைபடுத்துவது போன்றும் அக்கேரக்டர் உள்ளது. நிஜத்தில்
நான் அப்படி இல்லை. பிறரை நோகடிக்கும் குணம் எனக்கு இல்லை. சாதாரணமாக
எனக்கு அமைதியான சுபாவம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி எனக்கு முக்கியமான படம். மும்பையில் இருப்பதால்
ரசிகர்களுடன் சேர்ந்து இதை பார்க்க முடியவில்லை. நண்பர்களிடம் இருந்து இந்த
படம் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். கடந்த ஒரு
வருடமாக இந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன். இந்த படத்தில் இடம் பெறும்
காதல் ஒரு பட்டர் பிளை என்ற பாடல் எனக்கு பிடித்தமான பாடலாகும். மற்ற
பாடல்களும் எனக்கு பிடித்தமானவைதான், என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum