'மிட்நைட்ஸ் சில்ரன்' படவிழா: கொல்கத்தாவில் நுழைய சல்மான் ருஷ்டிக்கு தடை
Page 1 of 1

லண்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் 1981-ம் ஆண்டு ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ என்ற பெயரில் புத்தகம் எழுதினார். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு இந்திய பெண் இயக்குனர் தீபா மேத்தா ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ என்ற பெயரில் ஆங்கிலப் படம் எடுத்துள்ளார்.
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது நள்ளிரவில் பிறந்த குழந்தைகளின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் ஸ்ரேயா, ஷாபனா ஆஸ்மி, அனுபம்கேர், சீமா பிஸ்வாஸ், சத்யபாமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் டோரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கனடா படவிழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு 7 விருதுகளை பெற்றது. இந்தியாவில் நாளை வெளியாகிறது.
டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடந்த இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் சல்மான் ருஷ்டி படத்தின் இயக்குனர் தீபா மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு கொல்கத்தாவில் படத்தின் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டது.
இதில் சல்மான் ருஷ்டி, இயக்குனர் தீபாமேத்தா, படத்தில் நடித்த ராகுல்போஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. சல்மான் ருஷ்டி ஏற்கனவே எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற புத்தகம் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக கூறி அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் சல்மான் ருஷ்டி கொல்கத்தா வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மாநில அரசு கருதியது. இதையடுத்து சல்மான் ருஷ்டிக்கு சொல்கத்தாவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சல்மான் ருஷ்டி தனது கொல்கத்தா பயணத்தை ரத்து செய்தார்.
இதேபோல் தீபா மேத்தாவும் கொல்கத்தா விழாவை ரத்து செய்தார். தீபா மேத்தா கொல்கத்தாவில் புத்தக கண்காட்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். அந்த விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்பு சர்ச்சைக்குரிய வங்காள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தா வந்தபோது பல இடங்களில் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இப்போது சல்மான்ருஷ்டி வந்தால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி மாநில அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள எதிர்ப்பு கிளம்பியதால் அவரது பெயர் அழைப்பிதழில் இருந்து நீக்கப்பட்டது. அவர் வீடியோ மூலம் உரை நிகழ்த்த இருந்ததும் கைவிடப்பட்டது.
கொல்கத்தாவுக்கு நேற்று சல்மான் ருஷ்டி வந்தால் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஏராளமானோர் திரண்டு இருந்தனர். ஆனால் சல்மான் ருஷ்டி வருகை ரத்தானதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
‘மிட்நைட்ஸ் சில்ரன்’ படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனால் அந்த படம் திருவனந்தபுரம் படவிழாவில் திரையிடப்படவில்லை. இந்த நிலையில் நாளை இந்தியா முழுவதும் ரிலீசாகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மகள் நடித்த முதல் படவிழா… – உண்மையில் கமல் வராமல் போனதற்கு காரணம் என்ன?
» தமிழ் திரையுலகுக்கு சல்மான் ‘அட்வைஸ்’!
» ஷாரூக்கானுக்கு 5 ஆண்டு நுழைய தடை!
» வார்த்தையைக் காப்பாத்திட்டாரு சல்மான்.. சனா கான் மகிழ்ச்சி
» வடிவேலுவின் மதுரை வீட்டுக்குள் நுழைய முயன்ற 4 மர்ம நபர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum