தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருத்துவதுறையில் முறைகேடு…! பார்லிமென்ட்டில் உரையாற்றுகிறார் அமீர்கான்!!

Go down

மருத்துவதுறையில் முறைகேடு…! பார்லிமென்ட்டில் உரையாற்றுகிறார் அமீர்கான்!! Empty மருத்துவதுறையில் முறைகேடு…! பார்லிமென்ட்டில் உரையாற்றுகிறார் அமீர்கான்!!

Post  ishwarya Wed Apr 03, 2013 12:15 pm

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், முதன்முறையாக டி.வி. நிகழ்ச்சி ஒன்றை எடுத்து, நடத்தி வருகிறார். சத்தியமேவ ஜெயதே எனும் பெயரில் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமுதயாத்தில் நிலவும் பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

சமீபத்தில் மருத்துவதுறையில் உள்ள முறைகேடுகள‌ை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் அமீர்கான். கடந்த மே மாதம் 27ம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் நோயாளிகளிடம் இருந்து பணம் பறிக்க மருத்துவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்சசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு இந்திய மருத்துவக் கழகம், ஆமீர் கான் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மருத்துவதுறை முறைகேடு குறித்து ராஜ்யசபாவில் பேச, பா.ஜ.க., எம்.பி., சாந்த குமார் அமீர்கானுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட அமீர்கான், வருகிற 21ம் தேதி ராஜ்சபாவில் பேச இருக்கிறார். அமீருடன் சத்தியமேவ ஜெயதே குழுவினரும் செல்ல இருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமீர்கான் படத்தில் சஞ்சய் தத்
» காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு: சுரேஷ் கல்மாடியை திருப்திப்படுத்த ஷில்பா ஷெட்டிக்கு ரூ 71.73 லட்சம்
» தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.1.80 கோடி ஊழலா? போலீஸ் கமிஷனரிடம் ராமநாராயணன் மனு; கேபிள் டி.வி. ஒளிபரப்பில் முறைகேடு நடக்கவில்லை
» விஸ்வரூபம் தடை நியாயமற்றது : அமீர்கான்
» அமீர்கான் படத்தில் சிம்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum