தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் தடை நியாயமற்றது : அமீர்கான்

Go down

விஸ்வரூபம் தடை நியாயமற்றது : அமீர்கான் Empty விஸ்வரூபம் தடை நியாயமற்றது : அமீர்கான்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:03 pm



விஸ்வரூபம் திரைபடத்துக்கு தடை விதித்தது நியாயமற்றது என்று பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஜன. 25-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்படுவதாக இருந்தது.

இந்நிலையில், சில அமைப்புகள், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி ஜன. 22-ல் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அவ்வாறு தடை செய்யப்படவில்லையெனில், மேற்படி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் மனுவில் தெரிவித்து இருந்தனர்.

மேற்குறிப்பிட்ட அமைப்பினரின் நெருக்குதல் காரணமாக, தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரு வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. திரைப்படத் தணிக்கைக் குழுவைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் பார்வையிட்டு, அவர்கள் சான்று வழங்கிய பிறகே பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு திடீரென தடை விதித்தது. இது கமல் தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வரும் கமலுக்கு பிரபலங்கள் பல ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் நடிகர் அமீர் கானும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தணிக்கைக் குழு அனுமதி அளித்தப் பிறகு விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை விதித்திருப்பது நியாயமற்றது. எனவே இந்த தடையை நீக்கி உத்தரவு இட வேண்டும் என்று அமீர் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum