தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர்

Go down

இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர் Empty இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர்

Post  ishwarya Wed Apr 03, 2013 11:32 am

நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோல் திருமணம் இரண்டு தினங்களுக்கு முன்பு தென்னிந்திய முறைப்படி நடந்தது. புதுமண தம்பதிகளை இந்தி, தமிழ் மற்றும் பல்வேறு மொழி சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்தினர்.

ஆனால், ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த கரீனா கபூர் இந்த திருமணத்தை புறக்கணித் தார். தான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இஷா திருமணத்தில கலந்து கொள்ள முடியவில்லை என்று கரீனா கபூர் விளக்கம் அளித்தார். ஆனால், தோழிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, இஷா தியோல் திருமணத்தை கரீனா கபூர் புறக்கணித்தார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யுவா படத்தில் கரீனாகபூரும், இஷா தியோலும் இணைந்து நடித்தனர். அப்போது இருவரும் நெருங்கிய தோழிகளானார்கள். நேரில் சந்திக்க முடியாத சமயங்களில் செல்போனில் மணிக்கணக்கில் பேசி அரட்டை அடித்து வந்தனர். இதனால் இருவருக்குமே மொபைல் பில் எகிறியது. அப்படி இருந்தவர்களிடையே, ஆண் நண்பர்கள் நட்பு பிளவை ஏற்படுத்தியது.

ஆண் நட்பு கிடைத்த உடன், இருவரும் பேசுவதை குறைத்துக்கொண்டனர். இது நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டது. மேலும், இஷா தியோல் கரீனா கபூரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டார். இதனால், கரீனா கபூர் இஷாவின் நட்பை முழுவதுமாக முறித்துக் கொண்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இஷா தியோலின் திருமண சடங்குகள் தொடங்கிய சமயத்தில் கரீனா கபூர் ஊரில்தான் இருந்துள்ளார். திருமணத்துக்கு முந்தைய நாள்தான் அவர் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார். திருமணத்தை புறக்கணிக்கும் நோக்கத்தில்தான் கரீனாகபூர், வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட சினிமா சூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. எனவே, வெளிநாட்டு பயணத்தை ஓரிரு நாட்கள் தள்ளிப்போடுவதால் எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை.

இஷா தியோல் திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பி இருந்தால், வெளிநாட்டு பயணத்தை கரீனா ஒத்தி வைத்திருக்க வேண்டும். திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே,வெளிநாட்டு பயணத்தை தேர்ந்து எடுத்தார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum