மயிலாடும்பாறை அய்யப்ப சுவாமி கோவில்
Page 1 of 1
மயிலாடும்பாறை அய்யப்ப சுவாமி கோவில்
வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பகுதிக்கு அருகில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மயிலாடும்பாறை என்ற இடத்தில் சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலைப் போன்று வழிபாடு நடத்தக்கூடிய அய்யப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. மளுக்கப்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் 1970-ம் ஆண்டு இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர்.
அன்றிலிருந்து சோலையார் அணை, உருளிக்கல், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை மற்றும் மளுக்கப்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் இந்த கோவிலுக்கு வந்து மாலை அணிந்து இருமுடி கட்டுகின்றனர்.
பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சபரிமலையை போன்றே அடர்ந்த வனப்பகுதியில் மலைமீது இக்கோவில் அமைந்துள்ளது. சபரிமலையை போன்றே எரிமேலி என்ற இடத்தில் பாபர் சாமிக்கு பேட்டைத்துள்ளல் நடைபெறும் இடம், 18-ம் படி, கோவிலின் அடிவாரத்தில் பம்பை நதி போன்ற ஆறு ஒன்றும் அமைந்துள்ளது இன்னும் சிறப்பம்சம்.
சில பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இருமுடி கட்டி வந்து இந்த அய்யப்ப சுவாமி கோவிலிலும் கட்டுநிறை இறக்குகிறார்கள். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி 18-ம் படி பூஜை, நெய் அபிசேக பூஜை, மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் சபரிமலையில் நடைபெறுவதைப் போன்றே நடத்தப்பட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இந்த அன்னதானம் வழங்கப்படுவதற்கு முன் கருடன் கோவிலின் முன்புறம் பறந்து செல்வது வழக்கம். இந்த அண்டும் இதே போல் கருடன் பறந்தபின்பு அன்னதானம் தொடங்கப்பட்டது. அன்னதானம் சாப்பிட்ட பின்பு சாப்பிட்டவர்களின் இலைகளை எடுத்து வேண்டுதல் செய்தால் தங்களுக்கு வேண்டியதை அய்யப்பன் அருள்வார் என்பது ஐதீகம்.
அதனால் அன்னதானம் தொடங்குவதற்கு முன்பாகவே வேண்டுதல் நிறைவேற்ற விருப்பம் உள்ளவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து 18 படி பூஜை செய்து அய்யப்பனை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும், இந்த பகுதியில் யாரையும் இதுவரை எந்த வனவிலங்கு களும் தாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்: சைதாப்பேட்டை
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» அய்யப்ப சாமிகளுக்கான பயண விதிமுறைகள்
» கருப்பண சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» அய்யப்ப சாமிகளுக்கான பயண விதிமுறைகள்
» கருப்பண சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum