சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்: சைதாப்பேட்டை
Page 1 of 1

சென்னை சைதாப்பேட்டை செங்குந்த கோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆரம்பத்தில் செங்குந்த மரபினர் சைதை வாத்தியார் சுப்பிராய முதலி தெரு மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு சேரும் இடத்தில் விநாயகர் கோவில் கட்டி பூஜித்து வந்தனர்.
1800-ம் ஆண்டு இக்கோவில்யொட்டி சிறிய அளவில் கட்டப்பட்ட சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்யப்பட்டு மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் இன்றைக்கு திகழ்கிறது. கருவறையில் வள்ளிதெய்வானை சமேத சிவசுப்பிரமண்ய சுவாமி கம்பீரமாக எழுந்தருளி அருளாட்சி செய்து வருகிறார்.
செங்குந்த விநாயகர் சன்னதி, துர்க்கை சன்னதி வள்ளிதெய்வாளை சமேத சண்முகர் சன்னதி, காசிவிஸ்வநாதர் சன்னதி, அருணகிரிநாதர் சன்னதி, பைரவர் சன்னதி, இடும்பன் கடம்பன் சன்னதி, பழநி ஆண்டவர் சன்னதி, ராகு சன்னதி, சனீஸ்வரர் சன்னதி, நவக்கிரக சன்னதி, வீரபத்திரர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, லட்சுமிசரஸ்வதிதுர்க்கை சன்னதி, சமயக்குரவர் சன்னதி, ஆகியவை இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன.
இக்கோவிலில் தல விருட்சமாக வில்வ மரம், நாகலிங்க சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ளது. மூலவரான முருகப்பெருமானைமுழு மனதுடன் வணங்கி வேண்டிக்கொண்டால் எண்ணியவை ஈடேறுவதாக பக்தர்களின் நம்பிக்கை.
சிறப்புகள்:
தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகா கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், நிறைமணி காட்சி ஆகியவை இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.
பூஜைகள்:
காலை 6.30 மணிக்கு காலசாந்தி, 10.30 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் சாத்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சாயங்கால பூஜைகள், இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெற்று கோவில் சாத்தப்படும்.
தகவல் அறிய:
இக்கோவிலை பற்றி மேலும் தகவல் அறிய அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சார்ந்த செங்குந்த சபையை 2381 2546 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருப்பண சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» மயிலாடும்பாறை அய்யப்ப சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» மயிலாடும்பாறை அய்யப்ப சுவாமி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum