தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்சய் குமாரின் 100-வது படம் ஜோக்கர்: இந்தியா-பாகிஸ்தானில் நாளை ரிலீஸ்

Go down

அக்சய் குமாரின் 100-வது படம் ஜோக்கர்: இந்தியா-பாகிஸ்தானில் நாளை ரிலீஸ் Empty அக்சய் குமாரின் 100-வது படம் ஜோக்கர்: இந்தியா-பாகிஸ்தானில் நாளை ரிலீஸ்

Post  ishwarya Mon Apr 01, 2013 2:23 pm

ஷிரிஷ் குந்தர் இயக்கத்தில் அக்சய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரமாண்ட பாலிவுட் படம் ஜோக்கர். இதில் அக்சய் குமாருடன் சோனாக்சி சின்கா, ஷ்ரேயாஸ் தால்படே, மனிஷா லம்பா மற்றும் சித்ரங்டாசிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அக்சய் குமாரின் 100-வது படமான ஜோக்கர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஒரேசமயத்தில் நாளை திரைக்கு வருகிறது.சல்மான் கானின் ஏக் தா டைகர் மற்றும் சாயிப் அலி கானின் ஏஜென்ட் வினோத் ஆகிய படங்களுக்கு பாகிஸ்தானில் சென்சார்டு போர்டு அனுமதி அளிக்கவில்லை. அதன்பின்னர் இந்தியா-பாகிஸ்தானில் ஒரே சமயத்தில் ஜோக்கர் ரிலீசாகிறது.

சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு படமான ஜோக்கருக்கு இரு நாடுகளிலும் யு சான்றிதழ் கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக தயாரிப்பாளர் ஃபாரா கான் தெரிவித்தார்.

இப்படம் பக்லாபூர் என்ற கிராமத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட தனது கிராமத்தை மீண்டும் வரைபடத்தில் சேர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் அக்சய். அங்கு தனது குழுவினர் மற்றும் அப்பாவி பொதுமக்களுடன் இணைந்து போராடி, வரைபடத்தில் பெயரை சேர்க்கும் கலகலப்பான காட்சிகள் இப்படத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளன. இப்படம் பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum