தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் நாளை மறுநாள் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு

Go down

விஸ்வரூபம் நாளை மறுநாள் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு  Empty விஸ்வரூபம் நாளை மறுநாள் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு

Post  ishwarya Wed Mar 13, 2013 12:58 pm

சென்னை : பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ‘விஸ்வரூபம்‘ திரைப்படம் வரும் 8ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தடைகள் பல கடந்து, ‘விஸ்வரூபம்‘ படம் வரும் 7ம் தேதி வியாழன் அன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது. நீதி சற்றே நின்று வந்தாலும், அன்றே ஆனவற்றை எல்லாம் செய்து, எனக்கு உடனே உதவி செய்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக மற்றும் இந்திய மக்களுக்கும், என்னைத் தேடி வந்து ஆறுதல் சொன்ன தமிழ்த் திரையுலக நடிகர்கள் மற்றும் தொரூ.ல்நுட்பக் லைஞர்களுக்கும், எனக்குத் தெரியாமலே எனக்காகப் போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி. என் உரிமையைத் தமது என்று கருதி, பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்துக்கும் ஒரு இந்தியனாக என் ஆழ்மனதில் இருந்து நன்றி.

எதற்கும் கலங்காமல் புன்னகையுடன் இன்னல்களை ஏற்ற நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து, காதலாகி, கண்ணீர் மல்கி நிற்கிறேன். என் தமிழக மக்கள் காசோலைகளையும், பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து, ‘கலங்காதீர். யாமிருக்க பயமேன்’ என்ற அர்த்தத்தில் கடிதங்கள் இணைத்து அனுப்பியுள்ளனர். நெஞ்சு விம்மி, கண்ணீர்க் காட்சியை மறைக்க என் மனது, ‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்று கேவிக்கேவி பாடியது.

என் கலையையும், அன்பையும், மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் அன்றி வேறொன்றும் செய்வதறியேன். காசோலைகளையும், பணத்தையும் அன்புடன் திருப்பி அனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும், அரசியலும் என்னை வறியவன் ஆக்கினாலும், உண்பதற்கும், ஒதுங்குவதற்கும் அரிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது என்ற தைரியத்தில் இதைச் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும், என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.

பொறுமை காத்த என் ரசிக நற்பணியாளர்களுக்கு பெருவணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர்க் காரணத்தை செயலாக்கிக் காட்டி, ரவுத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம்பெறும். வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என்பதை ஊருக்கு எடுத்துக் காட்டிய என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, நான் தயாரித்த ‘விஸ்வரூபம்‘ படத்தை அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். வாரூ.ய செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வாரூ.ய பாரத மணித்திரு நாடு. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு!
» விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் நாளை மும்பை பயணம்
» விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக கமல்ஹாசன் நாளை மும்பை பயணம்
» விஸ்வரூபம் படம் டெல்லியில் நாளை ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum