சென்னிமலை திருத்தலம்
Page 1 of 1
சென்னிமலை திருத்தலம்
கந்தன் புகழ்பாடும் கவிகள் பல இருப்பினும், கந்த சஷ்டி கவசத்திற்கு என்று எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. புகழ்மிக்க கந்தசஷ்டி கவசம் பாடப்பெற்ற தலம் சிகரகிரி, சிரகிரி, சென் னிமலை, மகுடகிரி என்ற பெயர்களில் அழைக்கப்படும் வேலவன் குடிகொண்டிருக்கும் திருத்தலமாகும். கந்தசஷ்டி கவசத்தில், சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! என்ற வரி சென்னிமலையான சிரகிரியை குறிக்கிறது.
தல வரலாறு..........
சென்னிமலைக்கு அருகில் கொடுமணல் என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் பெரும் நிலக்கிழார் ஒருவர் வசித்து வந்தார். அவர் தனது பண்ணையில் நூற்றுக்கணக்கான பசு மாடுகளை வைத்திருந்தார். அவற்றை அருகில் உள்ள மலை பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். பின்பு மாலை கொட்டடிக்கு திரும்பியதும் பசுக்களிடம் இருந்து பால் கறக்கப்படும். ஒரு முறை இந்த பசு மந்தையில் இருந்த ஒரு பசுவின் மடுவில் பால் சுரக்கவில்லை.
அந்த பசுவுக்கு உடல்நலக்குறைவு ஏதாவது இருக்கும் என்று பணியாளர்களும், நிலக்கிழாரும் நினைத்தனர். ஆனால் ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல. பசு பால் கறந்து பல நாட்கள் ஆகி விட்டன. இதனால் நிலக்கிழாருக்கு சந்தேகம் உண்டானது. பசுவில் இருந்து முன்கூட்டியே யாராவது பாலை கறந்து விடுகிறார்களோ, என்று நினைத்தார் நிலக்கிழார்.
மண்ணுக்குள் மாணிக்கம்........
இதனால் அந்த பசுவை கண்காணிக்க நிலக்கிழாரே கிளம்பினார். வழக்கம் போல் அனைத்து பசுக்களுடனும் சேர்ந்து குறிப்பிட்ட அந்த பசுவும் மேய்ச்சலில் ஈடுபட்டது. பின்னர் சிறிது தொலைவில் உள்ள மேடான பகுதிக்கு சென்றது. இதனை பார்த்ததும் நிலக்கிழார் அந்த பசுவை பின் தொடர்ந்து சென்றார்.
அங்கு சென்றதும் அவர் கண்டகாட்சி அவருக்கு பெரும் வியப்பை அளித்தது. அந்த பசு மேடான பகுதியில் நின்று தனது மடியில் இருந்த பால் முழுவதையும் தானாக அந்த இடத்தில் சொரிந்தது. இதையடுத்து நிலக்கிழார் அந்த இடத்தில் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். உடனடியாக பணியாளர்கள் சிலரை வரச் செய்து அந்த மணல் மேட்டை தோண்டச் செய்தார்.
ஆறடி ஆழம் தோண்டியதும் அழகிய மாணிக்கம் கிடைத்தது. ஆம்! அந்த இடத்தில் அழகன் முருகன் சிலை தென்பட்டது. ஆனால் அந்த சிலையின் மேல்பகுதியில் இருந்து இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் மிகவும் அழகாக வடிக்கப்பட்டிருந்தது. இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகள் முறையான வேலைப்பாடு இல்லாமல் கரடு, முரடாக இருந்தது. இதனை கண்டதும் நிலக்கிழாரின் மனம் வெதும்பியது.
சிலையில் உளிபட்டு ரத்தம்........
சிலையின் கீழ் பகுதியையும் அழகுற வடிக்கும் எண்ணத்தில் ஒரு சிற்பியை அழைத்தார் நிலக்கிழார். அந்த சிற்பி, முருகப்பெருமா னின் சிலையை அழகுபடுத்த கீழ்பாகத்தை திருத்தம் செய்யும் விதமாக உளியை கொண்டு செதுக்கினார். அச்சிலையில் உளி ஒருமுறைபட்டதும், உளிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இந்த சிலை இப்படியே பிரதிஷ்டை ஆவதைத்தான் முருகன் விரும்புகிறார் என்று உணர்ந்த நிலக்கிழார், சென்னிமலையில் அப்படியே பிரதிஷ்டை செய்தார். தற்போதும் மூலவராக உள்ள முருகப்பெருமானின் சிலை இடுப்புக்கு கீழே உள்ள பகுதி வேலைப்பாடற்ற நிலை யில் கரடுமுரடாகத்தான் இருக்கும்.
எனவே மூலவரின் இடுப்புக்கு கீழே எப்போதும் வெள்ளிக்கவசம் சாத்தி இருப்பதை காணலாம். இந்த சென்னிமலையில் ஏறி முருகனை தரி சனம் செய்ய 1,300 திருப்படிகள் உள்ளன. வண்டி, வாகனங்கள் வாயிலாகவும் மலை உச் சிக்குச் செல்ல தனிப்பாதைகள் அமைக்கப்பட் டுள்ளன. கோவில் நிர்வாகம் சார்பில் மலை உச்சிக்கு செல்ல பஸ்களும் இயக்கப்படுகின்றன.
கிரக தோஷங்கள் அகலும்......
நாள்என் செயும் வினைதான் என் செயும்
எனை நாடி வந்த கோள்என் செயும்
கொடும் கூற்று என் செயும் குமரேசர்
இரு தாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே
சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களை யும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும் அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல கிரக பீடைகளும் உடனே விலகும்.
கோவில் அமைப்பு.......
மலையின் அடிவாரத்தில் மயில் வாகனக் கொறடு உள்ளது. இங்குதான் முடி காணிக்கை செலுத்த வேண்டும். மலை ஏறும் வழியில் இடும்பன், ஆற்று மலை விநாயகர், கடம்பவனேஸ்வரர், முத்துக்குமாரர் சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. கருவறையில் இரண்டு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில், ஞான தண்டாயு தத்தை வலது கரத்தில் ஏந்தியபடியும், இடது கரத்தை இடுப்பில் பொருத்தியபடியும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் சென்னிமலை முருகப்பெருமான்.
தெற்கு பிரகாரத்தில் மார்கண்டேஸ்வரர், இமைய வள்ளியம்மன் சன்னதிகளும், தென் மேற்கு பகுதியில் கணபதி, வடக்கு திருச்சுற் றில் காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதிகளும் உள்ளன. இந்த திருக்கோவிலுக்கு அருகில் வள்ளி, தெய்வானைக்கு தனிக்கோவில்கள் உள்ளன. இங்கு அகத்திய லிங்கம் அமைந்துள்ளது.
கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்..........
கந்தசஷ்டி கவசம் இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள் அதனை எங்கே அரங்கேற்றம் செய்வது என தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், சென்னிமலையில் அரங்கேற்றம் செய் என்று கூறி அருளினார். அதன்படி சென்னிமலையில், துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் எனத் தொடங்கும் கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்தார் பாலன் தேவராயர்.
இந்த பாடல் பாடப்பெற்ற சென்னிமலையில் கந்தசஷ்டி தினத்தன்று முருகப்பெருமானை வந்து வழிபட்டால் அதனால் கிடைக்கும் பலன் சொல்லிமாளாது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். வைகாசி விசாகம் மற்றும் மாதாந்திர சஷ்டி நாட்களும் மிகவும் புனிதமானவை.
இந்த தலத்தில் சஷ்டி நாட்களில், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து 6 சஷ்டி நாட்களில் வழிபட்டு வந்தால் பீடைகள், கிரக பீடைகள் தடைகள், பிணிகள், வறுமை நிலை, தீவினைகள் ஒழிந்து நம் வாழ்க்கை ஒளிரும்.
அர்ச்சகராக வந்த முருகன்..........
சிவாலயச் சோழன் என்ற மன்னன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க சென்னிமலை முருகனை வழிபட வந்தான். அவன் வந்தபோது ஆலயத்தில் அர்ச்சகர்கள் எவரும் இல்லை மன்னன் மனம் கலங்கி நின்றான். அப்போது முருகப்பெருமானே, அர்ச்சகர் உருவில் வந்து தன்னைத்தானே பூஜை செய்து, மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி அருள்புரிந்தார்.
முருகப்பெருமானின் திருப்புகழைத் திருப்புகழால் பாடிய அருணகிரிநாதருக்கு, சென்னி மலை முருகப்பெருமான் படிக்காசு வழங்கி அருள்பாலித்த திருவிளையாடலும் இங்கு நடைபெற்றது. பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இந்த சென்னிமலை ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் வழியில் 27 கிலோமீட் டர் தொலைவில் அமைந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உப்பூர் திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருவேள்விக்குடித் திருத்தலம்
» நவகரை திருத்தலம்
» நவகரை திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருவேள்விக்குடித் திருத்தலம்
» நவகரை திருத்தலம்
» நவகரை திருத்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum