தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருநள்ளாறு திருத்தலம்

Go down

திருநள்ளாறு திருத்தலம் Empty திருநள்ளாறு திருத்தலம்

Post  meenu Mon Jan 14, 2013 2:56 pm


திருநள்ளாறு சனீஸ்வரன் திருத்தலம் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. இதனை சுற்றி 4 மாட வீதிகள் உள்ளன. இந்த நான்கு வீதிகளிலும் விநாயகருக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன. திருநள்ளாறுக்கு ஆதிபுரிதலப்பாரிஸ்யம், நகவிடங்கபுரம், ராமேச்சுபுரம் என்ற பெயர்களும் உண்டு.

இந்த கோவிலின் 5 நிலை மாடங்களைக் கொண்ட கோபுரம் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் உள்ளது. பார்த்தவர்களை பக்தி பரவசமாக்கிவிடும் கோபுரத்தைக் கடந்து ஆலயத்தினுள் நுழைந்தால் தெற்கு வடக்கு பகுதியில் நந்தவனமும், பிரகாரத்தின் வடமேற்குக் கோவிலில் தெற்கு பார்த்த வசந்த மண்டபமும் காணப்படுகின்றன.

வடகோடியில் திருக்காளத்தி நாதர் சன்னதியும், யாகசாலையும் உள்ளது. கட்டைக்கோபுரத்தின் தென்பகுதியில் கற்பக விநாயகர் காட்சி தருகிறார். உட் பிரகாரத்தில் தெற்கு திருமாளிகைப் பகுதியில் முதலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைவணங்கும் நிலையாக நிற்கிறார்.

தெற்கு மாளிகை மத்தியில் நால்வரும் அடுத்து விநாயகர், சுப்பிரமணியர், அறுபத்து மூவரும் காட்சி தருகின்றனர். கர்ப்ப கிரகத்தில் பெருமானை தரிசித்துவிட்டு வலம்வரும் போது கட்டை கோபுரச்சுவரில் சிறிய மாடத்தினுள் (படம்) சனி பகவான் எழுந்தருளி இருக்கிறார். சனீஸ்வரரை வணங்கிய பின் அம்பிகையை தரிசிக்கலாம்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ்வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum