பாரதிராஜாவை நம்புகிறேன்: இனியா சொல்கிறார்
Page 1 of 1

சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இனியா, வாகைசூடவாவில் நடித்து அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடி என்ற தகவலுடன் டாப் கீயரில் சென்றார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அமீர் அ.கொ.கொ.வீயிலிருந்து விலக்கப்பட அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்த இனியாவுக்கும் அதே நிலை. சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த இனியா சோர்ந்து போனார். ஆனாலும் கவலைப்படவில்லை முயற்சிகளை தொடர்ந்தார். இப்போது தமிழ், மலையாளத்தில் 7 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். தமிழில் அடுத்து அம்மாவின் கைபேசி வர இருக்கிறது. அது தனக்கு பெரிய திருப்புமுனை தரும் என்று நம்புகிறார். நீண்டநாள் மவுனமாக இருந்தவர் இப்போது மனம் திறந்திருக்கிறார்.
“வாகை சூடவா திடீர்னு என்னை உயரத்துக்கு கொண்டு போச்சு. அதே அளவுக்கு அடுத்தடுத்து இரண்டு ஏமாற்றங்கள். வாகை சூடவாக்கு தேசிய விருது கிடைச்சுது. எனக்கும் கிடைக்க வேண்டியதாம். கடைசி ரவுண்டுல நானும், வித்யாபாலனும் இருந்தோம். நான் சொந்த குரலில் பேசாததால் தேசிய விருது வித்யாபாலனுக்கு போயிடுச்சி. தேசிய விருது மட்டும் கிடைச்சிருந்தா என்னோட இன்றைய இடமே வேற. அதனால இனி எந்தப் படத்தில் நடிச்சாலும் சொந்த குரல்லதான் டப்பிங் பேசுறதுன்னு முடிவு பண்ணிணேன். அடுத்த ஏமாற்றம் அன்னக்கொடியும் கொடிவீரனும், பாரதிராஜா படம், அமீர் ஜோடின்னு மகிழ்ச்சி வானத்துல பறந்தேன். அமீரோட போட்டோ ஷூட் நடந்தப்போ பாரதிராஜா சார் அப்படி பண்ணும்மா இப்படி பண்ணும்மான்னு சொன்னாரு. சார் நீங்க சொன்னா கையை கூட வெட்டிக்குவேன்னு சொன்னேன். அந்த அளவுக்கு நம்பினேன்
இப்பவும் அந்த நம்பிக்கைய இழக்கல. படத்துல நான் நடிக்கிறதா இருந்த மல்லாங்கிணறு மங்காத்தா என்ற கேரக்டர் ரொம்பவே பவர்புல்லானது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து விற்கிற பொண்ணு. இதுக்காக மாட்டு வண்டி ஓட்டுறது. முரட்டு காளைங்கள எப்படி கையாள்றது, வயல்காட்டுல உழவு செய்றதுன்னு நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன். மதுரை ஸ்லாங் கத்துக்கிட்டேன். ஆனால் எல்லாமே திடீர்னு கைவிட்டுபோனது கனவு மாதிரி இருக்கு. “இந்த கேரக்டர் வந்தா அன்னக்கொடி கேரக்டர் அடிவாங்கிடும். அதனால அந்தக் கதைய தனியா பண்றேன். அதை எப்ப பண்ணினாலும் நீதான் மங்காத்தா”ன்னு பாரதிராஜா சார் சொன்னார். அதை இப்போதும் முழுசா நம்புறேன். என்னோட ஆசையெல்லாம் வாகைசூடவால இழந்த தேசிய விருதை எப்படியாவது வாங்கியே தீருவதுங்றதுதான்.
நல்லா வருவீங்க இனியா… நல்லா வருவீங்க…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் தனுஷை நம்புகிறேன்! – ஐஸ்வர்யா
» பெயர் மாற்றியதால் அதிர்ஷ்டம்: ஜோதிடத்தை நம்புகிறேன்- தமன்னா
» இனியா இனி கவர்ச்சியா?!
» கவர்ச்சிக்கு மாறியது ஏன்?- இனியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum