நடிகை கரீனாகபூரை மணக்கிறார்: சயீப் அலிகான் திருமணத்தில் மகள்-மகன் பங்கேற்பு
Page 1 of 1

இந்திப்பட உலகின் கனவுக்கன்னியாக திகழும் நடிகை கரீனாகபூரும், நடிகர் சயீப் அலிகானும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். முதலில் கரீனா குடும்பத்தில் எதிர்ப்பு குரல் எழுந்தது. இப்போது எதிர்ப்பு அடங்கி திருமணத்துக்கு பச்சைகொடி காட்டி விட்டனர். நாளை மறுநாள் (16-ந் தேதி) கரீனாகபூர், சயீப் அலிகான் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடக்கிறது.
இருவரது குடும்பமும் பாரம்பரியமிக்கது. கரீனா கபூர் இந்தி சினிமாவின் முன்னோடியான ராஜ் கபூரின் பேத்தி ஆவார். ராஜ்கபூரின் 2-வது மகனான ரந்திர் கபூரின் 2-வது மகள்தான் கரீனாகபூர். இவரது சகோதரி கரீஸ்மா கபூரும் நடிகை ஆவார்.
தங்கையின் வரவால் கரீஸ்மா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார். கரீஷ்மாகபூர் நடிகர் சஞ்சய்கபூரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதேபோல் நடிகர் சயீப்அலிகானின் குடும்பமும் பாரம்பரியம் மிக்கது.
அரியானா மாநிலம் பட்டோடி நகரின் நவாப் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி. பிரபல கிரிக்கெட் வீரரான இவர் நடிகை சர்மிளா தாகூரை திருமணம் செய்தார். மன்சூர் அலிகான் பட்டோடி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கில் சயீப் அலிகானும் கரீனா கபூரும் இணைந்து பங்கேற்றனர்.
சயீப் அலிகான் படங்களில் நடித்துக் கொண்டு இருந்தபோது நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சயீப் அலிகான் – அம்ரிதாசிங் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
அம்ரிதாசிங் தனது 2 குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்தாலும் சயீப் அலிகான் அடிக்கடி லண்டன் சென்று குழந்தைகளை பார்த்து வருகிறார். தற்போது தனது திருமணத்தை மகள், மகன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று சயீப்அலிகான் விரும்பினார்.
இதை கரீனா கபூர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து வருகிற 16-ந்தேதி நடைபெறும் தந்தை திருமணத்தில் மகளும், மகனும் கலந்து கொள்கிறார்கள். இதுபற்றி நடிகர் ரந்திர் கபூர் கூறுகையில், கரீனா – சயீப் திருமணத்தில் சயீப்பின் குழந்தைகள் பங்கேற்பது எனக்கு சந்தோஷம். அவர்களுக்காக பிரத்யேகமான ஆடைகளை தேர்வு செய்து வைத்து இருக்கிறேன்.
கரீனா – சயீப் திருமணத்துக்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறீர்கள். இது முட்டாள்தனமான கேள்வி. கரீனாவும், சயீப்பும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். சயீப்பின் குழந்தைகள் மீது கரீனா பாசமாக நடந்து கொள்கிறார். குழந்தைகளுடன் கரீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்து இருக்கிறேன். சயீப்பின் குழந்தைகளும் கரீனாவை மிகவும் விரும்புகிறார்கள். சுதந்திரமாக பழகுகிறார்கள்.
இவ்வாறு ரந்திர்கபூர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 10-ந்தேதி கரீனா கபூர்- சயீப் அலிகான் நிச்சயதார்த்தம்
» ஒய்.விஜயா மகள் திருமணத்தில் திரண்ட பழைய நடிகைகள்

» ஒரே மேடையில் கைகோர்த்த கார்த்திக் மகன், ராதா மகள்
» தொழிலதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum