தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு ஹீரோ முக்கியமல்ல, பேமண்டுதான் முக்கியம்- அஞ்சலியின் அதிரடி

Go down

எனக்கு ஹீரோ முக்கியமல்ல, பேமண்டுதான் முக்கியம்- அஞ்சலியின் அதிரடி Empty எனக்கு ஹீரோ முக்கியமல்ல, பேமண்டுதான் முக்கியம்- அஞ்சலியின் அதிரடி

Post  ishwarya Sat Mar 30, 2013 12:27 pm

கலகலப்பு படத்தில் படுகவர்ச்சியாக நடிக்கிறது வரை அஞ்சலியின் சினிமா கேரியர் படுமந்தமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அந்த படத்தில் அயிட்டம் நடிகைகளாட்டம் இடுப்பை வெடுக் வெடுக்கென்று திருப்பி அஞ்சலி வைத்த ஸ்டெப்புகள் படம் பார்த்தவர்களின் மனதில் தடக் தடக் என்று அடித்தது. அப்படியொரு நறுக் ஆட்டம் ஆடினார் அஞ்சலி. குடும்ப குத்து விளக்காட்டம் இருந்தவர் இப்படி கொளுந்து விட்டு எரிந்ததால் அதுவரை கிளாமர் கதைகளில் நடிக்க அஞ்சலியை அணுகாமல இருந்தவர்கள் பின்னர் வரிசை கட்டினர்.

அந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட அஞ்சலி, தற்போது நல்ல சம்பளம் கொடுத்தால் எந்த மாதிரி வேண்டுமானாலும் திறமை காட்ட தயாராகி விட்டார். இதை தெரிந்துகொண்ட சிங்கம்-2 படக்குழுவினர், அப்படத்தில் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கு நடனமாட அழைப்பு விடுத்தனர். அதற்கு மறுப்பேதும் சொல்லாத அஞ்சலி, ஒரு 50 லட்சத்தை வெட்டுங்க. சரி ஆட்டம் போட்டுடுவோம் என்றார். அதைக்கேட்டு அதிர்ந்து போனவர்கள், பெரிய ஹீரோ படம் கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்று கேட்டதற்கு, எனக்கு ஹீரோ யாராக இருந்தாலும் கவலையில்லை. ஆடுவதுன்னு முடிவாகிப்போச்சு. அது அண்ணனா இருந்தாலென்ன தம்பியா இருந்தாலென்ன. எனக்குததேவை அரை கோடி முடியுமுன்னு சொல்லுங்க. இல்லை ஆளை விடுங்க என்று அசால்ட்டாக பேசினாராம். இதனால் ஹீரோ பெயரை சொல்லி அஞ்சலியை மசிய வைக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட படாதிபதி, ஒருவழியாக அவர் கேட்ட தொகையை தர சம்மதம் சொல்லி அஞ்சலிக்கு அட்வான்சும் பண்ணி விட்டாராம். ஆக அஞ்சலியின் அடுத்த அதிர்வேட்டு ஆட்டத்தை கண்டுகளிக்க இளவட்டங்கள் ஆயத்தமாகலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum